12 ஆண்டு குடும்ப வாழ்க்கை? ஜிவி - சைந்தவி விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?
சென்னை: ஜிவி பிரகாஷ், அவரது மனைவி சைந்தவி இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சென்னை குடும்ப நல நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், டார்லிங் படத்தில் ஹீரோவாக நடித்து நடிகராக மாறினார். இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இவர் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், பேச்சிலர் படங்கள் இவருக்கு வெற்றித்திரைப்படமாக அமைந்தன.

திருமணம்: ஜிவி பிரகாஷ் தனது பள்ளித் தோழியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னணி பாடகியான சைந்தவி, ஜிவி இசையில் பல ஹிட் பாடல்களை பாடி உள்ளார். குறிப்பாக அசுரன் படத்தில் வரும் 'எள்ளு வய பூக்கலையே' பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த தம்பதிகளுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த இவர்கள், கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு: இதையடுத்து, கடந்த மே மாதம், இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக அறிக்கை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி பிரிந்து வாழ விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் 25ந் தேதி ஜிவி பிரகாஷும் சைந்தவியும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

எல்லாமே வதந்தி: ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் மன முறிவுக்கு முக்கிய காரணமே பெச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி தான் என செய்திகள் இணையத்தில் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை திவ்ய பாரதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத ஒரு தனிப்பட்ட குடும்ப விவாகரத்து விஷயத்தில் என்னுடைய பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளது. எனக்கும், ஜிவியின் குடும்ப பிரச்சனைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெளிப்படையாக சொன்னால், எந்த ஒரு நடிகருடனும் நான் டேட்டிங் செய்ய மாட்டேன். கண்டிப்பாக திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்யவே மாட்டேன் என்று பதிவிட்டு இருந்தார். அதே போல, ஜி.வி. பிரகாஷ், திவ்ய பாரதியோடு சேர்ந்து நடித்தது தான் என்னுடைய மனைவியை பிரிய காரணம் என பலரும் பேசி வந்தார்கள். ஆனால், அது உண்மையில்லை. பேச்சுலர் படத்திற்கு பின் திவ்ய பாரதியை, கிங்ஸ்டன் படத்தில் தான் பார்த்தேன். வெளியில் நாங்கள் பார்த்துக்கொண்டது கிடையாது. இவ்வளவு தான் எங்களுக்கான உறவு என்று விளக்கம் கொடுத்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











