பிரிவதில் உறுதியாக இருக்கிறோம்.. குடும்ப நல நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி!

சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷும் சைந்தவியும் கடந்த சில மாதங்களுக்கு முன் தாங்கள் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். தொடர்ந்து இசையமைப்பதையும் நிறுத்தவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்த ஜிவி, 2015ஆம் ஆண்டு 'டார்லிங்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

காதல் திருமணம்:இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் தங்களது குடும்பத்தாருக்கு இடையே எழுந்துள்ள பிரச்சனையால் ஏற்கனவே சில ஆண்டுகளால் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், கடந்த மே மாதம், இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

GV Prakash Saindhavi divorce

இதைத்தொடர்ந்து இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த விசாரணை முடிந்ததும் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.

இவ்வளவு தான் எங்கள் உறவு: ஜிவி பிரகாசும், சைத்தவியும் பிரிய காரணம் பெச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி தான் என செய்திகள் இணையத்தில் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜிவி பிரகாஷ், நான் பேச்சுலர் திரைப்படத்தில் நடிக்கும் போது திவ்ய பாரதியோடு சேர்ந்து நடித்து தான் என்னுடைய மனைவியை பிரிய காரணம் என பலரும் பேசி வந்தார்கள். ஆனால் அது உண்மையில்லை. பேச்சுலர் படத்திற்கு பின் அவரை கிங்ஸ்டன் படத்தில் தான் பார்த்தேன். வெளியில் நாங்கள் பார்த்து கொண்டது கூட கிடையாது. இவ்வளவு தான் எங்களுக்கான உறவு என்று விளக்கம் கொடுத்து இருந்தார் ஜிவி பிரகாஷ்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X