வெற்றிமாறனால் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ரசிகர்கள் செம ஹேப்பி

சென்னை: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் சில மாதங்களுக்கு முன்பு தங்களுடய விவாகரத்தை அறிவித்தனர். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த அவர்கள் திடீரென விவாகரத்து என அறிவித்தது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது டைவர்ஸுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும்; அவர்கள் எதுவும் பொதுவெளியில் சொல்லவில்லை. இந்தச் சூழலில் அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் விஷயம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கோலிவுட்டின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரிடம் பணியாற்றி இசையை கற்றுக்கொண்டு வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படமும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மெகா ஹிட்டடித்தன. அந்தப் படத்துக்கு இசையமைக்கும்போது ஜிவி பிரகாஷ் டீன் ஏஜ் பையனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அவரது இசை வேறு மாதிரி இருந்தது.

GV Prakash Saindhavi Vetrimaaran

முன்னணி இசையமைப்பாளர்: வெயில் படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலிக்க ஆரம்பித்த பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. குசேலன், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், தெய்வ திருமகள், கிரீடம், தாண்டவம் என எக்கச்சக்க படங்களுக்கு இசையமைத்து ஆல்பம் ஹிட்டாக கொடுத்தார். மேலும் சூரரைப் போற்று படத்துக்கு இசையமைத்ததால் தேசிய விருதையும் வென்றார். இதற்கிடையே அவர் நடிகராகவும் அறிமுகமாகி பல படங்களில் நடித்துவருகிறார்.

திருமணம்: ஜிவி பிரகாஷ் தான் பள்ளி படிக்கும்போதிலிருந்தே சைந்தவியை காதலித்தார். இருவரும் வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். ஜிவியின் இசையில் சைந்தவி பாடிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ரகத்தில் இருப்பவை. இருவரும் சேர்ந்து பாடினாலே அந்தப் பாடலில் அவ்வளவு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். முக்கியமாக கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக பல வருடங்கள் வலம் வந்துகொண்டிருந்தார்கள்.

விவாகரத்து: அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்து குண்டை தூக்கி போட்டனர். அது பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியது. முக்கியமாக ஜிவி பிரகாஷ் நடிக்க வந்ததால்தான் இருவருக்கும் மனஸ்தாபமே ஆரம்பித்தது. காலம் போக போக அது குறையாமல் வளர்ந்துகொண்டே சென்றது என்று பலரும் பல யூகங்களை காரணங்களாக சொல்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும்; தங்களது ப்ரைவேசிக்கும், முடிவுக்கும் மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

மீண்டும் இணைந்த இருவர்: இந்நிலையில் ஜிவி பிரகாஷும், சைந்தவியும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். அதாவது வெற்றிமாறன் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் சார் என்ற படத்தில் விமல் நடித்திருக்கிறார். அந்தப் படத்துக்கு சித்து இசையமைத்திருக்கிறார். இதில் இடம்பெறும் ஒரு பாடலை ஜிவி பிரகாஷு, சைந்தவியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடல் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இதுதொடர்பான போஸ்டரில் இருவரின் பெயரை பார்த்த ரசிகர்கள் அட வெற்றிமாறனால் இருவரும் இணைந்திருக்கிறார்களே. வாழ்க்கையிலும் மீண்டும் இணைவார்களா என்று ஆர்வத்துடன் கேட்டுவருகின்றனர். அதேசமயம் இந்தப் பாடல் பதிவு இருவரின் பிரிவுக்கு முன்னர் நடந்ததா இல்லை பிறகுதான் நடந்ததா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X