GV Prakash divorce: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து முடிவுக்கு இந்த விஷயம் தான் காரணமா?
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் 'அன்வி' எனும் அழகான மகள் உள்ளார். இந்நிலையில், 11 வருட காதல் திருமண வாழ்க்கையை திடீரென இருவரும் முறித்துக் கொள்வதாக நேற்று அறிவித்தது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலர் ஆசை ஆசையாக காதலிப்பதும் உருகி உருகி ஒருவர் மீது ஒருவர் பைத்தியமாக இருப்பதும் ஒரு கட்டத்தில் திடீரென இப்படியொரு குண்டை தூக்கிப் போடுவதும் சமீப காலமாக தொடர் கதையாக நடந்துக் கொண்டே இருக்கின்றன.

சமந்தா - நாக சைதன்யா பிரிவு, தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு வரிசையில் தற்போது ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி பிரிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மந்த்வர்சரி: ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி பள்ளி காலத்திலேயே நண்பர்களாக இருந்த நிலையில் திருமணம் செய்துக் கொண்டனர். அவர்கள் இருவரும் எந்தளவுக்கு காதலர்கள் என்றால் திருமணமான 2013ம் ஆண்டு திருமணம் முடிந்த முதல் மாதத்தில் இருந்தே ஒவ்வொரு மாதமும் திருமண நாள் அன்று Monthversary என்பதை சைந்தவி கொண்டாடுவார் என்றும் தனக்கு வித விதமான கிஃப்ட் பொருட்களை அவர் பரிசளிப்பார். ஒரு கட்டத்துக்கு மேல் அடுத்த மாதம் என்ன வேண்டும் என்பதை நானே லிஸ்ட் போட்டு சொல்லி விடுவேன் என பேட்டி ஒன்றில் ஜி.வி. பிரகாஷே கூறி தன் மீது சைந்தவி எந்தளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் என்பதை வெளிக்காட்டியிருந்தார்.
7 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை: 2013ம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், உடனடியாக இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வரவில்லை. இருவரும் திருமணத்துக்குப் பிறகும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவரும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு தான் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்து அன்வி எனும் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைக்கு 4 வயதாகும் சூழலில் அதற்குள் இருவரும் பிரிவது அந்த குழந்தையின் எதிர்காலத்தையே பாதிக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
விவாகரத்துக்கு இதுதான் காரணமா?: இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இருந்தவரை எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும் அவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து தான் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையே பிரச்சனை வெடித்ததாக கூறுகின்றனர். ஹீரோயின்களுடன் நெருக்கமாக ஜி.வி. பிரகாஷ் நடிப்பது அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை என்றும் பல முறை இதன் காரணமாகவே சண்டை ஏற்பட்டுத்தான் அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே போய் விட்டதாகவும் அதன் காரணமாகத்தான் விவாகரத்து செய்யும் முடிவுக்கே இருவரும் வந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக ஜி.வி. பிரகாஷ் நடித்து வருவதாக ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அதிக நேரத்தை செலவழித்து வருகிறார் என்றும் சைந்தவி மற்றும் குழந்தையை பார்த்துக் கொள்ளவே அவருக்கு நேரமில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் கிளம்பி உள்ளன.
அந்த வார்த்தையை நோட் பண்ணீங்களா?: ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி வெளியிட்டுள்ள அறிக்கையில் Mental Peace வேண்டும் என்பதற்காகவே இருவரும் விவாகரத்து செய்து பிரியப் போவதாக தெரிவித்துள்ளனர். திருமணமாகி 11 ஆண்டுகள் ஆனாலும், குழந்தை பிறந்து சுமார் 3 ஆண்டுகளில் இருவரும் இப்படியொரு முடிவெடுக்க என்ன காரணம் என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











