நடிகைகளுடனான நெருக்கம்தான் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி பிரிவுக்கு காரணமா?.. செய்யாறு பாலு பேட்டி!
சென்னை: 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் 'ஓரம் போ', 'கிரீடம்', 'பொல்லாதவன்', 'காளை', 'குசேலன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'ஆடுகளம்', 'மதராசபட்டினம்' என பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார்.
விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து பிரபலமாகி வந்து ஜி.வி. பிரகாஷ் குசேலன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் விஜய்யின் தலைவா படத்தின் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா" பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். நடிப்பின் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் எழுந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
ஹீரோவான இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி போல இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர் தான் ஜி.வி. பிரகாஷ் குமார். முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். 2013 ஆம் ஆண்டு திருமணம் ஆன பின்னர் தான் ஹீரோவாக நடிக்கும் முடிவுக்கு ஜி.வி. பிரகாஷ் முன் வந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
பல படங்கள்: டார்லிங் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த நிலையில், திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, கடவுள் இருக்கா குமாரு, புரூஸ்லீ, நாச்சியார், செம, சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன், சிவப்பு மஞ்சள் பச்சை, 100% காதல், வணக்கம் தான் மாப்பிள்ளை, பேச்சிலர், ஜெயில், செல்ஃபி, ஐங்கரன், அடியே, ரெபெல், கள்வன் மற்றும் டியர் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தொடர் தோல்வி: ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்தாலும் அவர் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவி வந்தன. அவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களை கவர்ந்தன. ஆனாலும் தொடர்ந்து எப்படியாவது வெற்றி படத்தை கொடுத்து ஆக வேண்டும் என கொண்டே இருக்கிறார். இடிமுழக்கம், கிங்ஸ்டன் மற்றும் 13 என மூன்று படங்கள் அவர் நடிப்பில் உருவாகி வருகின்றன.
நடிகைகளுடன் நெருக்கம் தான் பிரச்சனையா?: ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிப்பது தான் சைந்தவிக்கு பிரச்சனை என்றால் அதற்கெல்லாம் வாய்ப்பே இருக்காது என செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் பேசி உள்ளார். டார்லிங் படத்தை முடித்த கையோடு 'கயல்' ஆனந்தியுடன் இணைந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்திலேயே படு மோசமாக ஜி.வி. பிரகாஷ் நடித்திருப்பார். நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பது தான் பிரச்சனை என்றால் சைந்தவி அப்போதே ஜி.வி. பிரகாஷை பிரிந்து இருப்பார் என்றும் பேச்சுலர் படத்தில் திவ்ய பாரதியுடன் நெருக்கமாக நடித்த போது கூட அவர் ரசித்து தான் பார்த்தார். இந்த பிரிவுக்கு வேறு ஏதோ ஸ்ட்ராங்கான ரீசன் இருக்க வேண்டும் என்றும் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
நடிக்க வேண்டாம் என்றாரா?: ஜி.வி. பிரகாஷ் நடித்து இந்த ஆண்டு வெளியான பல படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த நிலையில், ஜி.வி. பிரகாஷுக்கு எதிரான மோசமான விமர்சனங்கள் குவிந்தன. அதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல் இனிமேல் நடிக்க வேண்டாம் என்று ஏதாவது சைந்தவி சொல்ல இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிவு அறிவிப்பை வெளியிட்டார்களா? என தெரியவில்லை என செய்யாறு பாலு தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











