பிரிந்து வாழ்ந்தால் என்ன?.. சைந்தவிக்கு ஜிவி பிரகாஷ் மேல் எதுவும் குறையல.. அடுத்த நெகிழ்ச்சி செயல்
சென்னை: ஜிவி பிரகாஷும் சைந்தவியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அப்படி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டாலும் இன்னமும் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜிவி பிரகாஷ் கான்செர்ட்டில் சைந்தவி கலந்துகொண்டு பாடல் பாடினார். அது சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது.
ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ்; தனது முதல் படமான வெயில் படத்திலேயே தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதற்கு பிறகு தொடர்ந்து அவர் இசையமைத்த படங்கள் அனைத்திலும் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ஃபோக், மெலோடி, வெஸ்டர்ன் என எந்த ஜானரை எடுத்துக்கொண்டாலும் தன்னுடைய முத்திரையை அவர் பதித்ததன் காரணமாக குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளர் என்ற இடத்தை அடைந்தார் அவர்.

தேசிய விருது: ஜிவி பிரகாஷின் ஒவ்வொரு படத்தின் வேலையையும் கவனித்த ரசிகர்கள் அவருக்கு தகுந்த அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை தொடர்ந்து கொட்டிக்கொண்டே வந்தார்கள். ஆனால் ஜிவியோ தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். சூழல் இப்படி இருக்க சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதை வென்று அசத்தினார் அவர். இதற்கிடையே ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வர; டார்லிங் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ்.
பெரிய ஹிட் இல்லை: இசையமைப்பில் தனது தாக்கத்தை செலுத்த முடிந்த அளவுக்கு நடிப்பில் ஜிவி பிரகாஷால் செலுத்த முடியவில்லை. அவரது நடிப்பில் வெளியான படங்களில் சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு நல்ல பெயரை கொடுத்தது. பாலாவின் இயக்கத்தில் நடித்த நாச்சியார் படம்கூட பெரிதாக எடுபடவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தும் அவர்; இப்போது அதிக படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார்.
ஃபுல் ஃபார்மில் ஜிவி: அந்தவகையில் அவர் அசுரன், அமரன், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துவருகிறார். மேலும் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்துக்கு இசையமைக்கும் அவர்; அன்பறிவ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்துக்கும் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே காதலித்து திருமணம் செய்துகொண்ட சைந்தவியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். சைந்தவியும் அதனையே அறிவித்தார். அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார்.
உருக்கமான செயல்: இரண்டு பேரும் பிரிந்தாலும் Professionalஆக ஒருவரையொருவர் இன்னமும் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்கள். அதாவது சமீபத்தில் மலேசியாவில் ஜிவி பிரகாஷ் இசை கச்சேரி ஒன்றை நடத்தினார். அதில் சைந்தவி கலந்துகொண்டு பிறை தேடும் இரவிலே பாடலை பாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது. இந்நிலையில் அடுத்த சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதன்படி சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜிவி பிரகாஷுக்கு அமரன் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது சைந்தவி உற்சாகத்தோடு கைகளை தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைப் பார்த்த ரசிகர்களோ ஒருவரையொருவர் இன்னமும் விட்டுக்கொடுக்காமல்தான் இருக்கிறார்கள்; விரைவில் இரண்டு பேரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











