அப்பாட்ட போ பாப்பா.. சைந்தவி செய்த செயல்.. நெகிழ்ந்துபோன ஜிவி பிரகாஷ்.. மீண்டும் சேர வாய்ப்பா?
சென்னை: ஜிவி பிரகாஷும் சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தார்கள். அது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. இதனையடுத்து சமீபத்தில் நடந்த ஜிவி பிரகாஷின் இசை கச்சேரியில் சைந்தவியும் கலந்துகொண்டு பாடினார். தற்போது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரிவுகளில் ஒன்று ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு. இரண்டு பேரும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்துவந்தவர்கள். வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். இருவரும் கோலிவுட் இசை துறையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். பிரகாஷின் இசையில் சைந்தவி பாடிய பாடல்கள் அவ்வளவும் க்ளாஸிக் ரகம். இரண்டு பேரும் காதலர்கள் என்பதால் அவர்கள் பணியாற்றிய பாடல்களில் இயல்பாகவே காதல் வழிந்தோடும்.

பிரிவு: முழு காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார்கள் இருவரும். என்ன நடந்ததோ தெரியவில்லை சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தாங்கள் இரண்டு பேரும் பிரிவதாக தெரிவித்திருந்தார்கள். ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாகவும்; எந்த விதமான சர்ச்சைகளிலும் சிக்காத ஜோடியாகவும் வலம் வந்த அவர்களின் பிரிதல் ரசிகர்களை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த பிரிவுக்கு பல காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டன.
நடிப்புதான் காரணமா?: அதாவது ஜிவி பிரகாஷ் நடிக்க வந்தது ஆரம்பத்திலிருந்தே சைந்தவிக்கு பிடிக்கவில்லை; இருந்தாலும் ஒத்துக்கொண்ட அவர் ஒரே ஒரு கண்டிஷனைத்தான் வைத்தார். யாருடனும் நெருக்கமாக நடிக்கக்கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன். ஆனால் ஜிவி அதை பின்பற்றவில்லை; அதனால்தான் பிரிந்துவிட்டார்கள் என்றெல்லாம் தகவல்கள் பரவின. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்று அவர்களுக்குத்தான் தெரியும். அதேசமயம் அவர்கள் பிரிந்துவிட்டாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்துக்கு அப்ளை செய்ததாக உறுதியாக தெரியவில்லை.
ஆசைப்படும் அம்மா: அதேபோல் ஜிவி பிரகாஷின் தாயான ரெஹானா ஒரு பேட்டியில், 'சைந்தவி மிகவும் நல்ல பெண். அவர் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும்’ என்று தனது ஆசையை கூறியிருந்தார். இதனால் இருவருக்குமான சமாதான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறதோ என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு கிடைத்தது. அதாவது ஜிவி பிரகாஷின் இசை கச்சேரி மலேசியாவில் நடந்தது.
பிறை தேடும் இரவிலே: அந்த இசை கச்சேரியில் சைந்தவியும் கலந்துகொண்டார். அந்தக் கச்சேரியில் மயக்கம் என்ன திரைப்படத்தில் இடம்பெற்ற, 'பிறை தேடும் இரவிலே’ பாடலை ஜிவியும், சைந்தவியும் இணைந்து பாடினார்கள். பிரிவுக்கு பிறகு இரண்டு பேரும் அந்தப் பாடலை பாடியது ரசிகர்களை ரொம்பவே எமோஷனலாக்கியது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து; இவர்கள் மீண்டும் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று தங்களது ஆசையை கூற ஆரம்பித்தனர்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் இன்னொரு வீடியோ ஒன்றும் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது இந்த இசை கச்சேரிக்கு முன்னதாக ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார் பிரகாஷ். அப்போது அங்கிருந்த சைந்தவி; மகள் அன்வியை மேடையில் ஏற்றிவிட்டார். மேடைக்கு வந்த மகளை பாடிக்கொண்டே ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சியோடு அருகே அணைத்துக்கொண்டார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர்கள் மீண்டும் இணைவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











