Priya: 17 வயசுல போக வேண்டிய உயிரா? அந்த மருத்துவர்களை சும்மா விடக்கூடாது.. பொங்கிய பிரபலங்கள்!
சென்னை: கால்பந்தாட்ட வீராங்கனை மாணவி பிரியா மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி எடுத்துள்ளது.
சினிமா பிரபலங்கள் பலரும் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களையும் அந்த மருத்துவர்களுக்கு எதிரான கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் மாணவி பிரியாவின் மறைவால் ரொம்பவே மனம் நொந்து போய் ஏகப்பட்ட இரங்கல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

17 வயசுல போக வேண்டிய உயிரா
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மாணவி பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கால்பந்தாட்ட விளையாட்டில் பெரியாளாக வர வேண்டும் என்கிற முனைப்புடன் சிறு வயதில் இருந்தே பல போட்டிகளில் கலந்து கொண்டு வந்த பிரியாவுக்கு சமீபத்தில் காலில் தசை பிடிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது கால் ஜவ்வு அழுகியதாக மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

பரிதாப மரணம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கால் மாற்று அறுவை சிகிச்சை செய்தால், பிரியாவுக்கு கால் வந்து விடும். மீண்டும் பழையபடி கால்பந்தாட்டம் ஆடுவேன் என நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில், மருத்துவர்கள் இருவரின் கவனக் குறைவால் அவர் பரிதாபமாக பலியானது ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சாக்ஷி அகர்வால் விளாசல்
பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், அலட்சியமாக நடந்து கொண்ட அந்த மருத்துவர்களையும் அவர்களது மாஃபியா உலகத்தையும் நினைத்தாலே வெட்கமாக இருக்கு, கண்டிப்பாக அவர்களது லைசன்ஸ் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என நடிகை சாக்ஷி அகர்வால் விளாசித் தள்ளி உள்ளார்.

ஜிவி பிரகாஷ் கண்ணீர்
ஜிவி பிரகாஷ் கண்ணீர் "என் Game என்னை விட்டு போகாது,Come back குடுப்பேன்" தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை #JusticeForPriya என பிரியாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் கோரிக்கை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











