»   »  தானா வந்து சிக்கிய ஜிவி பிரகாஷ்: விடிய விடிய வச்சு செஞ்ச தல, தனுஷ் ஃபேன்ஸ்

தானா வந்து சிக்கிய ஜிவி பிரகாஷ்: விடிய விடிய வச்சு செஞ்ச தல, தனுஷ் ஃபேன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் மற்றும் தனுஷை கிண்டல் செய்த நடிகர் ஜி.வி. பிரகாஷை தல மற்றும் தனுஷ் ரசிகர்கள் விடிய விடிய கலாய்த்ததால் ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தனுஷை பிரிந்த பிறகே தனக்கு சம்பளம் அதிகமானதாகவும், தான் ஹீரோவானதாகவும் ட்விட்டரில் தெரிவித்தார். மேலும் அஜீத்தை வேறு கிண்டல் செய்தார்.

பின்னர் இந்த இரண்டு ட்வீட்டுகளையும் நீக்கிவிட்டார்.

எலும்பா

எலும்பா

தனுஷின் புகைப்படத்தை டிஸ்பிளே பிக்சராக வைத்துள்ள ஒருவர் ஜிவி பிரகாஷ் ட்வீட்டுகளை நீக்குவது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். இதை பார்த்த ஜிவி எலும்பா ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெச்சிருபாங்கடா பாத்துக்கோ என்று பதிலுக்கு ட்வீட்டினார்.

தனுஷ்

தனுஷ்

டிஸ்பிளேயில் தனுஷின் படம் இருந்ததால் ஜிவி பிரகாஷ் தனுஷை தான் எலும்பா என்றார் என அவரது ரசிகர்கள் கொந்தளித்து ட்விட்டரில் பொங்கியெழுந்துவிட்டனர்.

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

அஜீத்தை கிண்டல் செய்ததற்காக தல ரசிகர்கள் ஜிவி பிரகாஷை திட்டி ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்யவிட தனுஷ் ரசிகர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஜிவியை கழுவிக் கழுவி ஊத்தினார்கள்.

விடிய விடிய

விடிய விடிய

தல, தனுஷ் ரசிகர்கள் ஜிவி பிரகாஷை விடிய விடிய ட்விட்டரில் திட்டித் தீர்த்தார்கள். இதனால் ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக் ட்விட்டரில் அதுவும் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது.

English summary
After actor GV Prakash made fun of Ajith and Dhanush, their fans targeted him on twitter last night.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil