G.V. பிரகாஷை கட்டிப்பிடித்த ரசிகை.. 1000 விருதுக்கு சமம்னு எமோஷனல் போஸ்ட்!

சென்னை: இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் G.V. பிரகாஷ், ஜார்ஜ் மரியான், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ஹேப்பி ராஜ். இந்த படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கதாநாயகனாக G.V. பிரகாஷ்க்கு இந்த படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளது. வணிக ரீதிகாவும் வெற்றியை நோக்கி படம் நகர்ந்து வரும் நிலையில் நடிகர் G.V. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகை ஒருவர் அழுது கொண்டே பாராட்டியதை பகிர்ந்து, இந்த வார்த்தைகள் 1000 விருதுகளுக்கு சமம் என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது, ரசிகை ஒருவர் அழுது கொண்டே G.V. பிரகாஷைக் கட்டிப் பிடித்து பாராட்டுகிறார். ரசிகை அழுது கொண்டு இருப்பதால், அவரை மெல்ல மெல்ல ஆசுவாசப்படுத்த முயற்சிக்கிறார் G.V. பிரகாஷ். மேலும் அந்த ரசிகை இந்த படத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை, எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எல்லோரும் அவரவர் அப்பாவை இருக்கும் போதே மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் இல்லாத போது அவர்களுக்கு படையல் போட்டு எந்த பயனும் இல்லை. பெண் குழந்தைகள் பிறந்ததில் இருந்தே அப்பாக்களுடன் நன்கு ஒன்றிக் கொள்வார்கள். ஆனால் ஆண் மகன்கள் மிகவும் எளிதாக அப்பாக்களை புரிந்து கொள்வதில்லை" என்று பேசினார்.

GV Prakash Calls Emotional Fan Reaction Equal to 1000 Awards for Happy Raj
Photo Credit:

1000 விருதுகளுக்கு: ரசிகையின் இந்த பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்த G.V. பிரகாஷ், இந்த வாழ்த்துகளும் வார்த்தைகளும் போதும் சிஸ்டர் இவை 1000 விருதுகளுக்கு சமம் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் ரசிகை ஒருவர் தியேட்டரில் அழுது கொண்டே படக்குழுவை பாராட்டியது படக்குழுவினருக்கு திருப்தியைக் கொடுத்துள்ளது.

மாரி செல்வராஜ் பாராட்டு: ஏற்கனவே இயக்குநர் மாரி செல்வராஜ் மொத்த படக்குழுவினரையும் பாராட்டி பதிவிட்டிருந்தார். அதில், " ஹேப்பி ராஜ் திரைப்படம் பார்த்தேன். வெறும் கொண்டாட்டமும் குதூகலமும் மட்டுமே நிரப்பபட்டு வருகிற இன்னொரு சினிமாவாக இருக்கும் என்ற என் எண்ணத்தை உடைத்து நொறுக்கிய உணர்ச்சிமிக்க படைப்பாகவும் இருந்தது ஹேப்பிராஜ். குதிரைமுட்டை என்ற கேலி வார்த்தையையும் அதன் வலியையும் ஏற்று நடித்திருந்த ஜார்ஜ் மரியன் அவர்களின் இருப்பும் சிரிப்பும் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. நல்ல கதைக்குள் ஒரு அணிலை போல துள்ளி குதித்திருக்கும் ஜீ.வி பிரகாஷ் சார் அவர்களுக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் ப்ரியமும் வாழ்த்துகளும் என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X