விஷாலின் மார்க் ஆண்டனி படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்!

சென்னை : இசை அமைப்பாளராக இருந்து இப்பொழுது நடிகராக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்

சமீபத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது

நடிப்புக்கு வந்த பிறகு இசையமைப்பதை குறைத்துக்கொண்ட ஜிவி பிரகாஷ் இப்பொழுது விஷாலின் மார்க் ஆண்டனி படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

 நடிப்பிலும் கவனம் செலுத்திவரும் ஜிவி பிரகாஷ்குமார்

நடிப்பிலும் கவனம் செலுத்திவரும் ஜிவி பிரகாஷ்குமார்

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் நெருங்கிய சொந்தக்காரரான ஜிவி பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டுள்ளார். சூரரைப் போற்று, அசுரன் என இவர் இசையமைத்த பல திரைப்படங்கள் இவரது புகழை இந்திய அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இசைக்கு மத்தியில் நடிப்பிலும் கவனம் செலுத்திவரும் ஜிவி பிரகாஷ்குமார் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றார்.

மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி

கைவசம் ஒரு டஜன் திரைப்படங்களுக்கு மேல் பிஸியாக ஜிவி பிரகாஷ் நடித்து வந்தாலும் இசையமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் விஷால் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைக்க ஜிவி பிரகாஷ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் மற்றும் விரைவில் வெளியாக உள்ள பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு மார்க் ஆண்டனி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

வில்லனாக எஸ் ஜே சூர்யா

வில்லனாக எஸ் ஜே சூர்யா

மாநாடு படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது எஸ் ஜே சூர்யா வின் மிரட்டலான நடிப்பு. மாநாடு படத்தில் வில்லனாக நடித்து இருந்த எஸ் ஜே சூர்யாவுக்கு தொடர்ந்து வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிகிறது. அந்த வகையில் இப்போது மார்க் ஆண்டனி படத்திலும் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார்

இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார்

எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்திற்கு இசை அமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது. மேலும் மார்க் ஆண்டனி தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X