ராஜமெளலியுடன் ஜி.வி. பிரகாஷின் முன்னாள் மனைவி சைந்தவி.. எங்கே சந்திச்சிருங்காங்கனு பாருங்க!
ஹைதராபாத்: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், சைந்தவியும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்துவந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். ஆனால் திடீரென சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் இரண்டு பேரும் பிரிவதாக அறிவித்தார்கள். கோலிவுட்டில் அதிர்ச்சியை கிளப்பிய விவாகரத்துகளில் இவர்களின் விவாகரத்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் புகைப்படம் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் வெயில் படத்தில் மிகச்சிறந்த இசையை கொடுத்திருந்தார். அந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பலரையும் கவர்ந்திழுத்தது. அதனையடுத்து அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை வைத்து முன்னேறி முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

சைந்தவியுடன்: இதற்கிடையே அவர் சைந்தவியை தான் பள்ளியில் படிக்கும்போதிருந்தே காதலித்துவந்தார். பிறகு வீட்டு சம்மதத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். காதலோடு போய்க்கொண்டிருந்த அவர்களின் திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் நிற்கிறது. சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டு பேரும் தங்களது பிரிவை அறிவித்தனர். அது பலரையும் உச்சக்கட்ட அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
செம பாடகி சைந்தவி: சைந்தவியும் தமிழ் சினிமாவின் இசை துறையில்தான் இருக்கிறார். ஏராளமான பாடல்களை பாடியிருக்கும் அவர் ஜிவி பிரகாஷ் இசையில் ஸ்பெஷலாக பாடுவார். பாடுவது மட்டுமின்றி தனியார் சேனலில் நடக்கும் ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் பங்கேற்றிருக்கிறார் அவர். ஜிவி பிரகாஷ் நடிக்க சென்றதைவிடவும்; ஹீரோயின்களுடன் அவர் நெருக்கமாக நடித்தது சைந்தவிக்கு பிடிக்கவில்லை. அதன் காரணமாகத்தான் இந்த பிரிவு நடந்ததாக பலரும் சொன்னார்கள்.
மீண்டும் ஜிவியுடன்: சூழல் இப்படி இருக்க மலேசியாவில் இன்று ஜிவி பிரகாஷின் இசை கச்சேரி நடக்கிறது. அதில் மீண்டும் சைந்தவி பாடல்கள் பாடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் விவாகரத்துக்கு பிறகும் எந்த ஈகோவும், கோபமும் இல்லாமல் இரண்டு பேரும் இசைக்காக இணைவது உண்மையில் ஆரோக்கியமான விஷயம்தான் என்றும்; மீண்டும் அவர்கள் வாழ்க்கையிலும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று கமெண்ட்ஸ் செய்தனர்.
ராஜமௌலியுடன்: இந்நிலையில் இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியுடன் சைந்தவி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது ஒரு இசை கச்சேரியில் சைந்தவியை சந்தித்திருக்கிறார் ராஜமௌலி. அதில் சைந்தவி கருப்பு நிற புடவையில் இருக்கிறார். மேலும் அந்த கச்சேரியில் சைந்தவியும் சில பாடல்களை பாடியதாக தெரிகிறது. முன்னதாக ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











