நடிகைகளுடன் நெருக்கம்.. கண்டிஷன் போட்டேன்.. சுத்தமாக பிடிக்கவில்லை.. ஓபனாக பேசிய சைந்தவி

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை இப்போது விவாகரத்தில் நிற்கிறது.இரண்டு பேருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்துவிட்டனர். நிலைமை இப்படி இருக்க ஜிவி பிரகாஷ் குறித்து சைந்தவி பேசிய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது பள்ளி கால தோழியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த் 2013ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டு பேரின் திருமணம் நடைபெற்றது. பிறகு 2020ஆம் ஆண்டு அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். அவருக்கு அன்வி என்று பெயர் வைத்தார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை இப்போது விவாகரத்தில் போய் நிற்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் தங்களது விவாகரத்து விஷயத்தை இரண்டு பேரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

GV Prakash Ex Wife Saindhavis Interview Gone Trending on Social Media

சைந்தவி பேட்டி: இந்த விவாகரத்துக்கு காரணம் ஜிவி பிரகாஷ் நடிக்க வந்ததுதான் என்று பலரும் பேசினார்கள். ஆனால் இந்த விஷயத்தில் இஷ்டத்துக்கு கதை எழுதாதீர்கள் என்று இரண்டு பேருமே காட்டமாக கூறினார்கள். இந்நிலையில் சைந்தவியின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், "சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று ஜிவி பிரகாஷ் என்னிடம் சொன்னதும் நான் சில கண்டிஷன்களை போட்டேன்.

நெருக்கமாக பார்த்ததில்லை: ஆனால் அவர் எந்த கண்டிஷனையும் பின்பற்றவில்லை. அதுவரை நான் அவரை வேறு பெண்ணுடன் நெருக்கமாக இருந்தெல்லாம் பார்த்ததில்லை. அப்போதுதான் முதன்முறையாக டார்லிங் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் முதல் ஷோவை பார்க்க நான் சென்றிருந்தேன். அந்தப் படத்தில் சில நெருக்கமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதை பார்க்கும்போது எனக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது. ஆனால் அதை மறக்கடிக்கும் வகையில் படம் அமைந்திருந்தது.

மனைவி இருக்கிறார்: அதற்கு பிறகு ஒரு நடிகர் என்றால் அதெல்லாம் இயல்புதான் என்று புரிந்தது. நடிகர்களுக்கு திருமணம் முடிந்திருக்கிறது. அவர்களுக்கும் வீட்டில் மனைவி என்ற ஒருவர் இருக்கிறார். அவர்களும் என்னை போன்றுதானே உணர்வார்கள் என்பதை புரிந்துகொண்டேன். இப்போது எனக்கு அது பழகிவிட்டது. அவரை சில நடிகைகளுடன் நெருக்கமாக பார்க்கும்போது வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் அவர் செய்யும் தொழில் அந்த வகையை சேர்ந்தது.

கடினமாக உழைக்கிறார்: அந்தத் தொழில் அப்படிப்பட்டது என்பதை நான் புரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். நடிப்புக்காக அவர் பல விஷயங்களை செய்தார். நேரம் பார்க்காமல் வேலைகள் செய்துகொண்டிருக்கிறார். அவர் நடித்ததிலேயே பாலா இயக்கிய நாச்சியார் பிடிக்கும். அந்தப் படத்தில் தனது சௌகரியமான நிலைமையை விட்டு வெளியே வந்து ஜிவி நடித்தார். அதனால்தான் அந்தப் படத்தில் அவரால் அப்படிப்பட்ட ஒரு நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. நடிப்புக்காக கடினமாக உழைக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X