twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜீ வி .பிரகாஷ் பிறந்தநாளில் இந்த ஆண்டு ...சமீபத்தில் இப்படி ஒரு செயல்

    |

    சென்னை : G.V.பிரகாஷ்குமார் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கொரானா கட்டுப்பாடுகளை பின்பற்றி ஏழை எளிய மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், அனாதை இல்லங்களுக்கும் உணவுகள், உடைகள் வழங்கினர்

    பொதுமக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்காக எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஹோமியோபதி மருந்துகளும், நாட்டு மருந்துகளும் பொது மக்களுக்கு வழங்கினர்.

    இன்னைக்கு என் நகத்தை நான் கடிக்கவே மாட்டேன்.. திடீர் சபதம் எடுத்த கஜோல்.. என்ன காரணம்?இன்னைக்கு என் நகத்தை நான் கடிக்கவே மாட்டேன்.. திடீர் சபதம் எடுத்த கஜோல்.. என்ன காரணம்?

    மேலும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை சாமான்கள், பழங்கள், காய்கறிகள் வழங்கியும் மரக் கன்றுகளை கொடுத்தும், அதனை நட்டும் அனைத்து மாவட்டந்தோறும் G.V பிரகாஷ்குமார் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்..

    கெளரவப்படுத்தி

    கெளரவப்படுத்தி

    மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு கொரோனா வராமல் தடுக்க போராடும் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், காவல்துறையினர் அவர்களை கெளரவப்படுத்தும் விதமாக அவர்களின் கரங்களால் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களும், உடைகளும், மருத்துவ பொருட்களையும் வழங்க வைத்து அவர்களை கெளரவப்படுத்தினர்.

    பல திட்டங்கள்

    பல திட்டங்கள்

    தன் பிறந்தநாளை முன்னிட்டு இது போன்ற நற்செயல்களை தொடர்ந்து செய்து வரும் மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் G.V பிரகாஷ்குமார் நன்றி தெரிவித்தார். அது மட்டும் இன்றி இது போன்ற நல்ல செயல்கள் செய்ய இன்னும் பல திட்டங்கள் தீட்டி வருகின்றனர் இந்த குழு .

    வயதை குறைக்க

    வயதை குறைக்க

    பொதுவாக பிரபலங்கள் பிறந்தநாள் என்று வந்துவிட்டால் ஆடம்பரம் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் ஒரு பக்கம் என்று பெரும்பாலும் இருக்கும் , இல்லாவிட்டால் வீன்விளம்பரங்கள் பல செய்து வயதை குறைக்க முயற்சி செய்வர் .அந்த வகையில் ஜீ வி பிரகாஷ் பிறந்த நாள் இந்த ஆண்டு சூழ்நிலையை புரிந்து செயல் பட்டது பாராட்டத்தக்கது .

    நல்ல செயல்

    நல்ல செயல்

    இந்த கொடிய கொரானா காலகட்டத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வது தான் மனித பண்பாடு ,இதுவே நல்ல சிந்தனை ,நல்ல செயல் ஆகும் என்பதை இப்படி சில பிரபலங்கள் செய்யும் போது சாமான்ய மனிதர்களும் உணர்ந்து செயல்படுவர் என்பது தான் நிதர்சனமான உண்மை .

    English summary
    Music Director GV Prakash fans have celebrated his birth day in a novel way by donating to people who are affected due to the Lockdown.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X