twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா?

    By Siva
    |

    சென்னை: இசைத்துறையில் ஜி.வி. பிரகாஷின் அர்ப்பணிப்பை பாராட்டி சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

    இசை அமைப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் குமார் தற்போது ஒரு பிசியான நடிகர். படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக சேவையும் செய்து வருகிறார். சமூக பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    GV Prakash gets honorary doctorate again

    அவரின் சமூக சேவையை பார்த்தே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான சர்வம் தாளமயம் படம் அனைவரையும் கவர்ந்தது.

    இந்நிலையில் அவரின் இசை பயணத்தை பாராட்டி சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
    தனக்கு பட்டம் அளித்த பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

    முன்னதாக சமூக சேவைக்காக அவருக்கு புனித ஆண்ட்ரூஸ் தியலஜிக்கல் பல்கலைக்கழம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Universal Tamil University has given honorary doctorate to GV Prakash Kumar for his service to music industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X