twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்த கௌரவம்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    சமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷுக்கு டாக்டர் பட்டம்-வீடியோ

    சென்னை : இசையமைப்பாளராக இருந்து நடிகரான ஜி.வி.பிரகாஷ் சினிமா துறைப் பங்களிப்போடு நின்றுவிடாமல் சமூக பிரச்னைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதற்காக, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

    வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் 'டார்லிங்', 'த்ரிஷா இல்லேனா நயன்தாரா' உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகராகவும் பரிச்சயமானார்.

    GV Prakash getting proud for social services

    அதைத் தொடர்ந்து அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'செம' திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. சினிமா தவிர சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார் ஜி.வி.பி.

    ஜல்லிக்கட்டு போராட்டம், மீனவர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், காவிரி போராட்டம், விவசாயிகள் போராட்டம் என தமிழர்களின் பிரச்னைகளுக்காக சமூக வலைதளங்களிலும், களத்திலும் குரல் கொடுத்து வருகிறார்.

    நீட் தேர்வுக்கு பயிற்சியளிக்கும் விதமாக சமீபத்தில் இலவச செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட நிதி உதவிகள் அளித்தும் மக்கள் மனதில் இடம்பிடித்தார் ஜி.வி.பிரகாஷ்.

    இந்நிலையில் அவரது சமுக நலப் பணிகளை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. St.Andrews இறையியல் பல்கலைக்கழகம் ஜி.வி.பிரகாஷுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது.

    English summary
    Music composer GV Prakash gives his voice for social issues. He has received a honorable doctorate for social services.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X