சிறப்பான தரமான சம்பவங்களுக்காக வெயிட் பண்ணுங்க... வாடிவாசல் படம் குறித்து ஜிவி அப்டேட்
சென்னை : நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் வாடிவாசல்.
Recommended Video
சமீபத்தின் இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் வேலைகள் நின்றுள்ள நிலையில் படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது அப்டேட் கொடுத்துள்ளார்.

வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் லுக்
டைரக்டர் வெற்றி மாறன் இயக்கத்தின் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் வாடிவாசல். சூரரை போற்று படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சூட்டிங் பாதிப்பு
இந்த போஸ்டரில் படத்தில் சூர்யாவின் லுக் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ள நிலையில் படத்தின் வெளியீட்டிற்காக அவர்கள் காத்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கொரோனாவால் தற்போது சூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் ட்விஸ்ட்
இந்நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், விரைவில் படத்தின் அப்டேட்டை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றும் சிறப்பான எதிர்பார்க்காத அறிவிப்புகள் வெளியிடப்பட காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான படம்
அபர்ணா பாலமுரளியுடன் இணைந்து சூரரை போற்று என்ற வித்தியாசமான படத்தை கொடுத்திருந்தார் நடிகர் சூர்யா. இந்நிலையில் அவரது இந்த படத்திற்கான எதிர்பார்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற்போல வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்துள்ளது மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











