பிளாக்மெயில் படத்துக்காக ஜிவி பிரகாஷ் செய்தது என்ன தெரியுமா?.. தயாரிப்பாளர் நெகிழ்ச்சி
சென்னை: ஜிவி பிரகாஷும் சைந்தவியும் கடந்த வருடம் தாங்கள் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டனர். மேலும் நீதிமன்றத்திலும் சட்டப்பூர்வ விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க தனது கரியரிலும் முழு கவனத்தையும் மும்முரமாக செலுத்திவருகிறார் ஜிவி பிரகாஷ். இந்நிலையில் பிளாக்மெயில் படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்கொடி எமோஷனலாக பேசியிருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ்; தனது முதல் படமான வெயில் படத்திலேயே தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதற்கு பிறகு தொடர்ந்து அவர் இசையமைத்த படங்கள் அனைத்திலும் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ஃபோக், மெலோடி, வெஸ்டர்ன் என எந்த ஜானரை எடுத்துக்கொண்டாலும் தன்னுடைய முத்திரையை அவர் பதித்ததன் காரணமாக குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளர் என்ற இடத்தை அடைந்தார் அவர்.
தேசிய விருது: ஜிவி பிரகாஷின் ஒவ்வொரு படத்தின் வேலையையும் கவனித்த ரசிகர்கள் அவருக்கு தகுந்த அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை தொடர்ந்து கொட்டிக்கொண்டே வந்தார்கள். ஆனால் ஜிவியோ தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். சூழல் இப்படி இருக்க சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதை வென்று அசத்தினார் அவர். இதற்கிடையே ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வர; டார்லிங் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ்.

பெரிய ஹிட் இல்லை: இசையமைப்பில் தனது தாக்கத்தை செலுத்த முடிந்த அளவுக்கு நடிப்பில் ஜிவி பிரகாஷால் செலுத்த முடியவில்லை. அவரது நடிப்பில் வெளியான படங்களில் சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு நல்ல பெயரை கொடுத்தது. பாலாவின் இயக்கத்தில் நடித்த நாச்சியார் படம்கூட பெரிதாக எடுபடவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தும் அவர்; இப்போது அதிக படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார்.
ஃபுல் ஃபார்மில் ஜிவி: அந்தவகையில் அவர் அசுரன், அமரன், லக்கி பாஸ்கர், குட் பேட் அக்லி ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்துக்கு ஜிவிதா இசை. ஒருபக்கம் இசையமைபில் பிஸியான அவர்; மறுபக்கம் தொடர்ந்து நடிக்கவும் செய்கிறார். அந்தவகையில் இப்போது அவர் பிளாக்மெயில் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
விட்டுக்கொடுத்த ஜிவி பிரகாஷ்: இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜெய்க்கொடி அமல்ராஜ், "பிளாக்மெயில் படத்துக்காக நான் யாருக்காவது நன்றி சொல்ல வேண்டுமென்றால் ஜிவி பிரகாஷுக்குத்தான் சொல்ல வேண்டும். நிதி பற்றாக்குறை காரணமாக எட்டு நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருந்தது. ஜிவிதான் தலையிட்டு அதை முடிக்க எங்களுக்கு உதவினார். நடிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதற்கு முன்பேமுழு சம்பளத்தையும் கேட்பதாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஜிவியோ படத்துக்கு பேசப்பட்ட சம்பளத்தில் பாதிதான் பெற்றார்" என்றார்.


Click it and Unblock the Notifications











