ஒரு வார்த்தை சொன்ன ஜி. வி. பிரகாஷ்: 'அசுரன்' தனுஷ் ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: தனுஷின் அசுரன் படத்திற்கு பார்த்து பார்த்து இசையமைக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் கோலிவுட்டின் பிசியான ஹீரோக்களில் ஒருவர். நடிப்பதில் பிசியாக இருந்தாலும் படங்களுக்கு இசையமைக்க தவறுவது இல்லை. தனுஷின் அசுரன் படத்திற்கு அவர் தான் இசை.
மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.

தனுஷ்
அசுரன் படத்திற்கு இசையமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது ரொம்பவே ஸ்பெஷல். இது குறித்த விபரங்களை விரைவில் வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

ஜி.வி. பிரகாஷ்
தனுஷின் பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் ஆகிய படங்களுக்கு ஸ்பெஷல் இசையை தந்த ஜி.வி. பிரகாஷ் அசுரன் படத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமரசம்
ஜி.வி. பிரகாஷ் குமார், தனுஷ் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து ஜி.வி. பிரகாஷ் தனுஷ் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடித்தக்கது.

ஹீரோ
தனுஷை பிரிந்த பிறகு ஜி.வி. பிரகாஷ் குமார் கோலிவுட்டின் பிசியாக ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். பழசை எல்லாம் மறந்துவிட்டு அவரும், தனுஷும் ஒன்று சேர்ந்தது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. இதே போன்று தனுஷ், அனிருத் கூட்டணி விரைவில் சேர்ந்து வேலை செய்ய
வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications











