ஏன்டா உனக்கு தலைய வைக்குறதுக்கு வேற இடமே கெடைக்கலயா.!? ஜிவி பிரகாஷை வாரும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகர் ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஜிவி பிரகாஷ், பாடகர், நடிகர், புரொடியூசர் என்ற பல்வேறு முகங்களை கொண்டவர். பென்சில் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் ஹீரோவாக அறிமுகமானார்.
தொடர்ந்து தனக்கு சூட்டாகும் கதைகளில் நடித்து, தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். இந்நிலையில் அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் பேச்சுலர் புதிய படத்தில் நடிக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக்
இதில், இவருக்கு ஜோடியாக கோயம்புத்தூரைச் சேர்ந்த மாடல் திவ்யபாரதி நடிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.

அந்தரங்க இடம்
இதில் நடிகர் ஜிவி பிரகாஷ், பெண்ணின் இரு தொடைகளுக்கு இடையே அந்தரங்க இடத்தில் தலைவைத்து படித்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. பார்க்கும்போதே படு கிளுகிளுப்பாக உள்ளது அந்த போஸ்டர்.
காதலில் விழுந்து எழுங்கள்
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜிவி பிரகாஷ், அதில், அவள் என் அறைக்குள் நுழைந்தபோது. "நிச்சயமாக" அன்பின் இறைவன் வந்துவிட்டார் என்று நானே சொன்னேன்.. பெருங்கூட்டத்துக்கு மத்தியில் உன் சிறு உரையாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. காதலில் விழுந்து எழுந்திரியுங்கள்.. என்று பதிவிட்டுள்ளார்.
வேற இடமே கிடைக்கலையா?
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன்டா உனக்கு தலைய வைக்குறதுக்கு வேற இடமே கெடைக்கலயா என கேட்டு வாரி வருகின்றனர்.
வேதாளம் முருங்க மரம்
இப்பதான் நல்ல.. நல்ல.. படம்லாம் நடிச்சிட்டு வந்த.. திரும்ப வேதாளம் முருங்க மரம் ஏறுது..!! என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.
வெளிப்படுத்துங்கள்
அந்தரங்கங்களை வெளிப்படுத்தி என்ன பிரயோஜனம் சகோ..!! உங்கள் அர்த்தமுள்ள ராகங்களை வெளிப்படுத்துங்கள்...!! திறமைகளை இசையில் வைத்துக் கொண்டு மற்றவற்றை ஏன் அசை போட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள் சகோ.!! என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











