ஜி.வி. பிரகாஷின் ’டியர்’ டிரெய்லர்.. அப்படியே குட் நைட் மூவி மாதிரியே இருக்கு.. இதுல யாரு தெரியுமா?

சென்னை: வெள்ளிக்கிழமை ராமசாமி என்றே ஜி.வி. பிரகாஷ் குமாரை சோஷியல் மீடியா முதல் ப்ளூ சட்டை மாறன் வரை பலரும் கலாய்த்து வருகின்றனர். ரெபல், கள்வன் படங்களை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் அடுத்த வாரம் ரிலீஸ் செய்யவுள்ள டியர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு வெளியான மணிகண்டனின் குட் நைட் படத்தின் காப்பி போலவே இந்த படத்தின் கதை உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

GV Prakash Kumar and Aishwarya Rajesh s Dear trailer out now

இந்த ஜி.வி. பிரகாஷ் கிட்ட இருந்து தமிழ் சினிமாவை யாராச்சும் காப்பாத்துங்களேன்ப்பா என சொல்லிக் கொண்டே அந்த டிரெய்லரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

டியர் டிரெய்லர்: ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோ அவருக்கு ஜோடி ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியே சூப்பரா இருக்கே என நினைத்தால் டார்லிங் ஜி.வி. பிரகாஷ் குமார் அப்படியே டியராக மாறி இந்த படத்தில் பார்க்க அவ்வளவு க்யூட்டாக இருக்கிறார். அவருக்கு அக்கா மாதிரி ஐஸ்வர்யா ராஜேஷ் மணப்பெண் என வந்தாலும் டிரெய்லரில் அதிகம் ஸ்கோர் செய்வது அவர் தான். ஏனென்றால் இந்த டியர் படத்தில் ஹீரோவுக்கு பதில் ஹீரோயின் குறட்டை விடுவது தான் கதை.

குட் நைட் லேடி வெர்ஷன்: மஞ்சுமெல் பாய்ஸ் என ஒரு படம் வந்தால் மஞ்சுமெல் கேர்ள்ஸ் என டைட்டில் ஏன் வைக்கல என கேள்விக் கேட்கும் உலகத்தில் பெண்களுக்கு மட்டும் குறட்டை வராதா என இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி உள்ளார். வழக்கம் போல தனது அசத்தலான நடிப்பால் ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்கோர் செய்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திலும் நடிப்பு பிராக்டீஸ் செய்வது டிரெய்லரிலேயே அம்பலமாகி விடுகிறது. மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப் படமாக மாறிய நிலையில், அதே போன்ற கதையுடன் டியர் D Ear என டைட்டிலில் புத்திசாலித்தனமாக யோசித்த இயக்குநர் கதையையும் லேடீஸ் வெர்ஷனாக எடுத்துள்ள நிலையில், இந்த படத்தையும் ரசிகர்கள் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

சகிப்புத்தன்மை: குறட்டையை குணப்படுத்துவது எல்லாம் மேட்டரே கிடையாது. கணவனும் மனைவியும் சகிப்புத்தன்மையுடன் இருப்பது தான் விஷயம் என்பதை நோக்கித்தான் இந்த படத்தின் கதையும் இருப்பது டிரெய்லரிலேயே தெளிவாக காட்டியுள்ளனர். குட் நைட் படத்தின் அந்த குறட்டை மேட்டரை தாண்டி காமெடியாக படத்தை கொண்டு போயிருப்பதை டிரெய்லரில் காட்டியுள்ளனர். இதை நம்பி ரசிகர்கள் அடுத்த வாரம் ஏப்ரல் 11ம் தேதி படத்தை பார்த்து வெற்றி பெற வைப்பார்களா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். அதற்கு அடுத்த வாரம் கிங்ஸ்டன் ஆன் தி வே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X