திவ்யபாரதியுடன் ஜி.வி. பிரகாஷ் நடித்த கிங்ஸ்டன் படம் டீசர் வந்துடுச்சு.. பேய்த்தனமா மிரட்டுதே!
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வரும் படங்கள் படுதோல்வியை சந்தித்து வரும் நிலையில், தனது அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய கொஞ்சம் கேப் விட்டிருந்த ஜி.வி. பிரகாஷ் தற்போது மீண்டும் களத்தில் இறங்க தயாராகி விட்டார். ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் டீசர் தற்போது ரிலீஸ் தேதியுடன் வெளியாகியுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு டார்லிங் பேய் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், மீண்டும் தற்போது பேய் படத்தை கையில் எடுத்திருக்கிறார். இந்தியாவின் முதல் கடல் ஃபேண்டஸி திரைப்படம் என்கிற டேக் லைனுடன் கிங்ஸ்டன் படம் உருவாகியுள்ள நிலையில், அதன் டிரெய்லர் வித்தியாசமாகவும் மிரட்டலாகவும் உள்ளது.

பாடகி சைந்தவியை ஜி.வி. பிரகாஷ் விவாகரத்து செய்த பின்னர், ஜி.வி. பிரகாஷ் படம் வெளியாக உள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதையும் வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
பேச்சுலர் ஜோடி: சதீஷ் சிவகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சுலர் படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தில் திவ்யபாரதியுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பார் ஜி.வி. பிரகாஷ். அவரது விவாகரத்துக்கே அந்த நடிகை தான் காரணம் என கிசுகிசுக்கள் கூட வெளியாகின. இந்நிலையில், மீண்டும் தனது ஹிட் ஜோடியுடன் இணைந்து ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் தான் கிங்ஸ்டன்.
கிங்ஸ்டன் டீசர் ரிலீஸ்: கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள கப்பல் பேய் படமான கிங்ஸ்டன் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படம் கடல் சார்ந்த படமாக வெளியான நிலையில், கடலுக்கு செல்லும் யாரும் திரும்ப வருவதில்லை என்கிற கதையுடன் பேய் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஜி.வி. பிரகாஷுக்கு இந்த படமாவது வெற்றியை கொடுக்குமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரிலீஸ் தேதி எப்போ?: தொடர்ந்து புதிய படங்களின் ரிலீஸ் தேதிகள் லாக் செய்யப்பட்டு வரும் நிலையில், மார்ச் மாதம் 7ம் தேதியை புக் செய்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ரிபெல், கள்வன் மற்றும் டியர் என 3 படங்களும் தோல்வியைத் தழுவிய நிலையில், கிங்ஸ்டன் படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இசையில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாகவும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











