»   »  இந்த பொழப்புக்குப் பேருதான் எச்ச! - ஜிவி பிரகாஷ் கடும் தாக்கு

இந்த பொழப்புக்குப் பேருதான் எச்ச! - ஜிவி பிரகாஷ் கடும் தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டின் விரும்பத்தக்க நடிகர் யார்? இப்படி ஒரு தலைப்பில் ஒரு முன்னணி ஆங்கில நாளேடு நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

அதில் மிகப் பெரிய மோசடி வேலை நடந்திருப்பதாக, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆதாரத்தோடு குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த கருத்துக் கணிப்பில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தவர் விஜய்தான் என்றும், ஆனால் விஜய்யை அந்த பத்திரிகையால் நேரடியாகச் சந்தித்து பேட்டி எடுக்க முடியாததால், தனுஷை அந்த இடத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

GV Prakash Kumar blasts Leading English daily

விஜய்யைத் தொடர்பு கொள்ளவே முடியாத நிலையில், அந்த பத்திரிகையின் நிருபர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷைத் தொடர்பு கொண்டு, 'இந்த ஆண்டின் விரும்பத்தக்க ஹீரோ' என்ற கருத்துக் கணிப்பில் விஜய் முதலிடம் பிடித்துள்ளதாகவும், அதுகுறித்து அவரிடம் பேச வேண்டும்... உதவ முடியுமா? என்றும் வாட்ஸ்ஆப்பில் கேட்டுள்ளார்.

அதற்கு ஜிவி பிரகாஷ், அது என் வேலை இல்லை. அவரது மேனேஜர் ராமுவைத் தொடர்பு கொள்ளுங்கள். என் தொழில் விஷயம் தவிர வேறு எதையும் விஜய்யிடம் பேசுவது நாகரீகமல்ல,' என்று பதிலளித்துள்ளார்.

அடுத்த சில தினங்களில் விஜய்யைத் தூக்கிவிட்டு, அந்த இடத்துக்கு தனுஷைக் கொண்டு வந்திருந்தது அந்தப் பத்திரிகை.

GV Prakash Kumar blasts Leading English daily

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜிவி பிரகாஷ், தானும் அந்த நிருபரும் பேசிய வாட்ஸ்ஆப் ஸ்க்ரீன் ஷாட்டை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்ல, அந்த செய்தித் தாளையும் படுகேவலமாக விமர்சித்துள்ளார்.

#GVdoesntneedtoliethalapathy என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கிடலாமா என்று கேட்ட ஒருவருக்கு, ஜிவி பிரகாஷ் சொன்ன பதில் இது:

"உண்மையா சொன்னா அவமானம்ணா... எச்ச பொழப்பு தேவையில்ல. நான் உண்மையைச் சொல்றேன். எதற்காக பயப்பட வேண்டும். தலை நிமிர்ந்து நடப்பேன்."

ஜிவியின் இந்த பதிவைப் பார்த்ததும், 'தனுஷுக்கும் ஜிவிக்கும் ஏதோ பிரச்சினை' என்று புதிய பிரச்சினையைக் கிளப்பியுள்ளனர் சிலர்.

English summary
GV Prakash Kumar has blasted leading English daily for changing the most desirable actor opinion poll result for their convenience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil