ஜி.வி. பிரகாஷுடன் விவாகரத்து.. பல வருடங்களுக்கு பிறகு இமான் உடன் கூட்டணி சேர்ந்த சைந்தவி!

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்த பாடகி சைந்தவி அவரை திருமணம் செய்துக் கொண்டு ஒரு அழகான பெண் குழந்தையையும் பெற்றெடுத்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக ஜி.வி. பிரகாஷை பிரியும் முடிவுக்கு சைந்தவி வந்து விட்டார். இருவரும் ஒரு மனதாக பிரியப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்புகளை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றனர். சமந்தா - நாக சைதன்யா, தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வரிசையில் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவியின் விவாகரத்தும் ரசிகர்களை ஷாக் ஆக்கியது. அடுத்து இன்னொரு பிரபல நடிகரும் தனது மனைவியை பிரியப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

GV Prakash Saindhavi D Imman

சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை இந்த ஜென்மத்தில் மறக்கவே மாட்டேன் என சொல்லி பகீர் கிளப்பிய டி. இமான் தற்போது பல வருடங்கள் கழித்து சைந்தவியுடன் கூட்டணி வைத்துள்ளார். அதன் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து: பள்ளியில் முளைத்த காதல் அப்படியே படிப்படியாக வளர்ந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்றது. 11 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்து வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அன்வி என பெயர் வைத்து வளர்த்து வருகின்றனர். குழந்தை பிறந்து 4 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், இருவரும் கடந்த மே 13ம் தேதி பிரியப் போவதாக அறிவித்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சிவகார்த்திகேயனுடன் பஞ்சாயத்து: இன்னொரு பக்கம் இசையமைப்பாளர் டி. இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தனிப்பட்ட பிரச்சனை வெடித்தது. சிவகார்த்திகேயனுக்கு பல வெற்றிப் பாடல்களை கொடுத்து வந்த டி. இமான் வாழ்க்கையையே சிவகார்த்திகேயன் கெடுத்து விட்டார் என பல குற்றச்சாட்டுகள் கிளம்பின. சினிமாவில் திடீரென இமானுக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில், பார்த்திபனுடன் இணைந்து டீன்ஸ் படத்தில் பணியாற்றிய இமான் அடுத்ததாக சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படத்திற்கு இசையமைத்தார். அடுத்ததாக ஜெய் மற்றும் யோகி பாபு நடிக்கும் பேபி அண்ட் பேபி படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இமான் இசையில் சைந்தவி: ஏபிசிடி படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இமான் சாருடன் கூட்டணி வைத்து பாடுவது ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது என பேபி அண்ட் பேபி படத்தில் தாலாட்டு பாடலை பாடியுள்ள சைந்தவி வீடியோ மூலம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அதிகமாக மற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றாமல் இருந்து வந்த சைந்தவி ஜி.வி. பிரகாஷை பிரிந்த நிலையில், பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றும் முடிவுக்கு வந்து இருப்பது தெரிகிறது. தனுஷை பிரிந்த பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இயக்கத்தில் ஆர்வம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு தங்கள் சுதந்திரம் தடைபடுவதால் தான் விவாகரத்து முடிவுக்கு பிரபலங்கள் வருகிறார்கள் என்றும் பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Read more about: gv prakash saindhavi d imman
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X