பேயை காமிச்சா சிரிக்கக்கூடாது.. கிங்ஸ்டனை கிழித்த ரோஸ்ட் பிரதர்ஸ்.. இதுல 4 பார்ட் வேற!
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி காம்போவில் வெளியான பேச்சுலர் படம் இளைஞர்கள் மத்தியில் பேசப்பட்ட நிலையில், மீண்டும் அதே ஜோடியை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தைக் கொடுத்து ஹிட் ஆக்கிவிடலாம் என நினைத்த நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தொழில்நுட்ப ரீதியாக படம் ஸ்ட்ராங்காக இருந்தாலும் ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனம்.
20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு ஜி.வி. பிரகாஷ் குமாரின் இந்த கடல் ஹாரர் படம் உருவாகியுள்ளது. படத்தின் புரமோஷனை முன்னிட்டு ஜி.வி பிரகாஷ் கொடுத்த பேட்டி ஒன்றில் கிங்ஸ்டன் படத்தை 4 பாகங்களாக எடுக்கப் போவதாக பெருமையாக பேசியிருந்தார். படத்தின் முடிவிலும் 2ம் பாகத்துக்கான லீடு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்கு போட்டதை போலவே காமெடி பண்ணியுள்ளனர் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால் நல்லா இருக்கும் என்றும் அவர் ஹீரோவாக நடிப்பது எல்லாம் வேண்டாத வேலை என ரோஸ்ட் பிரதர்ஸ் எனும் டிரெண்டாகி வரும் விமர்சக சகோதரர்கள் படத்தை பார்த்துவிட்டு கொடுத்த விமர்சனம் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
கிங்ஸ்டன் முதல் நாள் வசூல்: ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நடிப்பில் நேற்று வெளியான கடல் பேய் படமான கிங்ஸ்டன் படம் முதல் நாளில் தமிழில் 70 லட்சம் ரூபாயும் தெலுங்கில் 20 லட்சம் ரூபாய் என ஒட்டுமொத்தமாக 90 லட்சம் ரூபாயை மட்டுமே வசூல் செய்துள்ளது. படத்துக்கு எதிராக குவிந்து வரும் கலவையான விமர்சனங்கள் காரணமாக முதல் வார முடிவில் இந்த படம் 3 கோடி ரூபாய் வசூலை அடைவதே கஷ்டம் என்கின்றனர். 20 கோடி பட்ஜெட்டில் படத்தை எடுத்துவிட்டு இவ்வளவு கம்மியாக வசூல் வந்தால் பெரிய நஷ்டம் ஏற்படுவது உறுதி என்கின்றனர்.
பேயை காட்டினால் சிரிக்கக் கூடாது: கிங்ஸ்டன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அப்படியே தத்ரூபமாக பேய் மேக்கப் போட்ட மனிதர்கள் நடந்து வருவதை பார்த்து திவ்யபாரதி ஷாக்காகி பயப்படுவது போல சீன் போட்டதை எல்லாம் நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கிங்ஸ்டன் படத்தை பார்த்த ரோஸ்ட் பிரதர்ஸ் உண்மையாகவே படத்தில் சில குறைகள் இருந்தாலும் பாசிட்டிவ் விமர்சனம் கொடுக்கத்தான் வந்தோம். ஆனால், படத்தை பார்த்து கடுப்பாகி விட்டோம். பேயை காட்டினால் பயம் வரவேண்டும் ரசிகர்கள் சிரிக்கக் கூடாது. அந்தளவுக்கு மொக்கையாக எடுத்து வைத்திருக்கிறார்கள் படத்தை என கலாய்த்துத் தள்ளியுள்ளனர்.
குட் பேட் அக்லி மியூசிக் சூப்பர்: ஜி.வி. பிரகாஷ் குமார் என்னவொரு திறமையான இசையமைப்பாளர் குட் பேட் அக்லி படத்துக்கு எல்லாம் தாறுமாறாக இசையமைத்துள்ளார். ஆனால், படங்களில் ஹீரோவாக நடித்து ஏன் தான் தனது பெயரை கெடுத்துக்கிறாரோ தெரியவில்லை என்றும் அவர் மியூசிக் போடுற வேலையை மட்டும் பார்க்கலாம். கிங்ஸ்டன் படத்தை எல்லாம் அரை மணி நேரம் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என சோலியை முடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











