Kingston Blue Sattai Maran Review: ஒரே குழப்பம்.. கிங்ஸ்டன் படத்தை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி வெளியான படம் கிங்ஸ்டன். இந்த படம் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு 25 வது படம். இதனால் இந்த படத்தின் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். படத்தை ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரித்துள்ளார். மேலும், அவரே இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பார்க்கலாம்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அமானுஷ்ய முறையில் கொல்லப்படுகிறார்கள். அதனால் யாரும் மீன் பிடிக்க போய்விட வேண்டாம், உயிருக்கு ஆபத்து எனக் கூறுகிறார்கள். இது மட்டும் இல்லாமல், கடலுக்குள் ஒரு வேலியே கட்டிவிடுகிறார்கள். அந்த ஊரில் இருக்கும் கதாநாயகன், நமது மீனவர்களை கொல்வது அமானுஷ்யமா இல்லை வேறு ஏதாவது விளையாட்டா, எனத் தெரிந்து கொள்ள கடலுக்குச் செல்கிறார். அதன் பின்னர் என்ன ஆச்சு என்பது இந்த படத்தின் கதை.

GV Prakash kumar Kingston Review Tamil Blue Sattai Maran Slams Screenplay
விமர்சனம்: படம் முழுவதும் ரொம்பவும் குழப்பம். கிரிஸ்டோபர் நோலன் படத்தை பார்க்கும்போது குழப்பமாக இருக்கும், இரண்டாவது முறையாக பார்ப்போம். அந்த அளவிற்கு பொருமையான ரசிகர்களையே வெறுப்பேற்றும் அளவிற்கு இந்த படத்தை எடுத்து வைத்துள்ளார்கள். நான் - லீனியரில் படத்தை சொல்கிறேன் என முன்னே, பின்னே என படத்தை மொத்தமாக குழப்பி வைத்துள்ளார்கள். தெலுங்கு படத்தில் பிளாஷ்பேக் சொல்வதற்கு ஒரு முதியவரை வைத்திருப்பார்கள், அதேபோல் இந்தப் படத்தில், குமரவேல் நடித்துள்ளார். அவருக்கு இந்த படத்தில் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

GV Prakash kumar Kingston Review Tamil Blue Sattai Maran Slams Screenplay

குழப்பம்: திரைக்கதையில் தான் நம்மை குழப்பி உள்ளார்கள் என்றால், கதையில் படக்குழுவினரே குழம்பிப்போய் உள்ளார்கள். இது புதையல் எடுக்கிற படமா, பேய் படமா ஃபேண்டசி படமா என படத்தை எந்த ஜானரில் எடுப்பது எனத் தெரியாமல் படக்குழுவினர் குழம்பி, நம்மையும் குழப்பியுள்ளார்கள். தமிழ் சினிமாவில் நேட்டிவிட்டி படம் எடுக்கிறேன் என அந்தந்த ஊரின் வட்டார மொழியில் பேசுவார்கள், அது போல இந்த படத்தில் தூத்துக்குடி வட்டார வழக்கில் பேசுகிறேன் என கொலை செய்து வைத்துள்ளார்கள். ஒருபுறம் தூத்துக்குடி பாஷை பேசிக் கொண்டு உள்ளார்கள், திடீரென படத்தை நிறுத்திவிட்டு, மெட்ராஸ் பாஷையில் குத்து பாட்டு ஒன்று போட்டுள்ளார்கள்.

GV Prakash kumar Kingston Review Tamil Blue Sattai Maran Slams Screenplay

25 வது படம்: உங்களுக்கு வரவில்லை என்றால் விட்டுவிடுங்கள், ஏன் போட்டு இப்படி எங்கள் உயிரை வாங்குகிறீர்கள்? இந்த படம் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 25வது படம். இதற்கு முன்னர் வந்த படம் 24 வது படம், இது 25 வது படம். எண்ணிக்கையில் ஒரு படம் கூடியுள்ளது, அவ்வளவுதான். 25 வது படம் என்பதற்காக கொண்டுபோய் தலையைக் கொடுக்க முடியுமா?" என அந்த வீடியோவில் பேசியுள்ளார். அவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவரது இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X