பாத் டப்பில் கயாடு லோஹருடன் GV பிரகாஷ்குமார்.. தாறுமாறான டைட்டில்.. புது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சென்னை: இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் தன்னை சகலகலா வல்லவனாக மெல்ல மெல்ல நிறுவி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த மாதம் கிங்ஸ்டன் என்ற படம் வெளியானது. படம் வசூல் ரீதியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் மிகச்சிறிய பட்ஜெட்டில் எப்படி இப்படியொரு படம் உருவாக்கப்பட்டது என்று தமிழ் திரையுலகமே வியப்பில் பார்த்தது. இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிவிட்டார். இசையமைப்பாளராக கடந்த ஆண்டில் இருந்து அவர் மிகவும் பிஸியாக உள்ளார். இந்த ஆண்டில் மட்டும் இவரது இசையில் பல படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகியுள்ளது. கடைசியாக வெளியான வீர தீர சூரன் பாகம் 2 மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களுக்கு பலமாக இருந்தது அவரது இசை என்று தாராளமாக கூறலாம்.

இவரது இசையில் வெளியாகும் படங்கள் அனைத்தும் இசைக்காக பாராட்டப்பட்டு வருகிறது. இது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு படத்திலும் தனக்கான டிரேட் மார்க் இசையை, தனித்துவமான இசையை வழங்கி வருகிறார். கடந்த ஆண்டில் ரிலீஸ் ஆன தங்கலான், அமரன், லக்கி பாஸ்கர் போன்ற படங்கள் இதற்கு உதாரணம்.

GV Prakash Kumar Romance With Kayadu Lohar On Immortal Movie First Look Release

ஜி.வி. பிரகாஷ் குமார்: இசையில் இவர் தனது முந்தைய படங்களில் இருந்து தனித்து தெரிய முக்கிய காரணமே அவர் சினிமாக்களில் நடிப்பதுதான் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் 100வது படமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

படக்குழு: ஏ.கே. ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இரண்டாவது படமான இந்த படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக இன்றைக்கு தமிழ் சினிமாவின் மார்க்கெட்டில் கவனத்தை ஈர்த்துள்ள நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டே இந்த படத்தின் பணிகள் தொடங்கி இருந்தாலும், படத்தின் பணிகள் இப்போதுதான் பெருமளவு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ரிலீஸ் செய்வார் என்று படக்குழு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

Take a Poll

பாத் டப்பில்: இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் டைட்டிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு ஆங்கிலத்தில் 'Immortal' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. Immortal என்றால் அழியாத என்று பொருள். மேலும் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் என இருவரும் நுரை நிரம்பிய பாத் டப்பில் அமர்ந்துள்ளார்கள். இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X