அந்த மாதிரி படங்களில் மட்டும் நடிக்கிறேனா… மனம் திறந்த ஜிவி பிரகாஷ் !

சென்னை : இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் டார்லிங் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி மியூசிக் மற்றும் நடிப்பு என இரண்டிலும் மிரட்டி வருகிறார்.

Recommended Video

விருதுகளை நோக்கி போவதில்லை GV Prakash Finest Journey in JAIL | Vasantha Balan

செல்ஃபி, ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க நேரமில்லை, காதலை தேடி நித்தியானந்தா, 4ஜி,அடங்காதே, இடிமுழக்கம் என ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இன்று ஜெயில் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் சுவாரசியமான பேட்டி அளித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்

இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ், ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு மிகவும் பிஸியாகவே உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பேச்சுலர்

பேச்சுலர்

தமிழ் சினிமாவில் வழக்கமாக வெளியாகும் காதல் படங்களில் இருந்து, கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது பேச்சுலர். சதீஷ் செல்வகுமார் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்யாபாரதி, பகவதி பெருமாள், முனிஸ்காந்த் இவர்களுடன் பெரும் இளைஞர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

லிவ்விங் டூ கெதர்

லிவ்விங் டூ கெதர்

காதல்,லிவ்விங் டூ கெதர் ரிலேஷன் ஷிப் என இளசுகள் கொண்டாடும் திரைப்படமாக பேச்சுலர் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ், நடித்த இதற்கு முந்தைய திரைப்படங்களும் இதே சாயலிலே இருந்தன. ஒரு வேளை ஜிவியே இளசுகளில் மனதில் இடம் பிடிக்க அடல்ட் கன்டென்ட் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அந்த மாதிரி படங்களை

அந்த மாதிரி படங்களை

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், அடல்ட் கன்டென்ட் படங்களை தேர்வு செய்து நடிக்கவில்லை. நான் இதுவரை 19 திரைப்படங்களில் நடித்துள்ளேன். இதில், திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் பேச்சுலர் திரைப்படம் தான் ரொமான்டிக்கான கதை என்றார்.

எண்ணத்தை மாற்றும்

எண்ணத்தை மாற்றும்

ஒரு வேளை இதுபோன்ற எண்ணம் என் மீது இருந்தால் அந்த எண்ணத்தை ஜெயில் திரைப்படம் நிச்சயம் மாற்றும் என்று நான் நினைக்கிறேன். ஜெயில் திரைப்படம் சமூதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் திரைப்படமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார். வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயில் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X