World of Parasakthi: பராசக்தியில் SK செய்த ஒரு வேலை.. மேடையிலேயே உடைத்த GV.. ரவி மோகன் ஷாக்!
சென்னை: சிவகார்த்திகேயன் ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம், பராசக்தி. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் 1960 கால கட்டங்களில் நடைபெறும் கதைக்களம் என்பதால் படத்திற்காக படக்குழு செய்த பொருட் செலவு படத்தின் மொத்த பட்ஜெட்டில் பெரும் பகுதிதான். இப்படி இருக்கும்போது படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட பல பழைய காலத்து பொருட்களை பொதுமக்களுக்கு கண்காட்சியாக காட்ட முடிவு செய்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் World of Parasakthi என்ற நிகழ்ச்சியை படக்குழு நடத்தி வருகிறது.
இதில் மொத்த படக்குழுவும் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள். இதில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசும்போது சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, எனக்கு முதல் தேசிய விருது வாங்கிக் கொடுத்தவர் இயக்குநர் சுதா கொங்கரா தான். அதனால் அவரது படம் என்றால் எனக்கு தனி மகிழ்ச்சி வந்துவிடுகிறது. ஏற்கனவே பல பீரியாடிக் படங்கள் செய்து விட்டேன். அப்படியானால் இந்த படத்தில் நான் என்ன மாதிரி வேலை செய்யப் போகிறேன் என்று எனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

சிவகார்த்திகேயன் செய்த சம்பவம்: நல்லபடியாக இசை வந்துள்ளது. இது எனது 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம். இந்த படத்தில் எனக்காக இசையமைப்பாளர்களும் பாடல்கள் பாடிக் கொடுத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா மற்றும் ஷான் ரோல்டனுக்கு நன்றிகள். அதேபோல் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ள படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி. அந்த பாடலும் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்.
ரவி மோகன் ஷாக்: ஜி.வி. பிரகாஷ் குமார் இவ்வாறு பேசியதும் ரவி மோகனுக்கு ஷாக் ஆகிவிட்டது. உடனே தனக்கு அருகில் அமர்ந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயனிடம் இது எப்போது நடந்தது என்று கேள்வி எழுப்பினார். படத்தில் வில்லனாக நடித்த ரவி மோகனுக்கே தெரியாமல் சிவகார்த்திகேயன் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளாரே என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் எப்போது வெளியாகும் என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள். படம் வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பொங்கல் சிவகார்த்திகேயன் பொங்கலாக தியேட்டரில் அதகளம் செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications











