Happy Raj: யூத் அளவுக்கு வசூல் வேட்டை நடத்தாத ஹாப்பி ராஜ்.. ஜி.வி. பிரகாஷ் படம் லாபமா? நஷ்டமா?

சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் இலவசமாக இசையமைத்து கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்த யூத் திரைப்படம் அதிரடியாக யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு 53 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டி தாய் கிழவி படத்தின் வசூலை முறியடிக்க முந்திக் கொண்டு செல்கிறது.

ஆனால், கடந்த வாரம் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் யூத் படத்தை விட நல்ல கதையம்சம் மற்றும் கருத்துகளை கொண்ட ஹாப்பி ராஜ் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக வசூல் வேட்டை நடத்த முடியாமல் திணறி வருகிறது.

GV Prakash Kumar s Happy Raj movie is Hit or Flop What about its 6 Days Box Office Collection

அறிமுக இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீ கெளரி ப்ரியா, ஜார்ஜ் மரியன், அப்பாஸ் நடித்த ஹாப்பி ராஜ் திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை தந்ததா? அல்லது நஷ்டத்தை கொடுத்ததா? என்பது குறித்து இங்கே லேசாக அலசுவோம் வாருங்கள்..

இந்த ஆண்டு ஹிட் அடித்த படங்கள்: பொங்கல் ரேஸில் வெளியான படங்களில் தயாரிப்பாளருக்கு லாபத்தைக் கொடுத்த படமாக ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் உள்ளது. சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பெரிதாக லாபத்தைக் கொடுக்கவில்லை என்றாலும், பாக்ஸ் ஆபீஸ் வசூலை தாண்டி ஆடியோ ரைட்ஸ், சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் ரைட்ஸ் உள்ளிட்டவற்றால் ஓரளவுக்கு லாபத்தையே கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். அபிஷன் ஜீவிந்த் நடித்த வித் லவ், ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி, கென் கருணாஸ் நடித்த யூத் உள்ளிட்ட படங்கள் மட்டுமே கடந்த 3 மாதங்களில் வசூல் வேட்டை நடத்தி லாபத்தைக் கொடுத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹாப்பி ராஜ் வசூல்: ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹாப்பி ராஜ் திரைப்படம் 6 நாட்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 5 கோடி அளவுக்கு வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாக்ஸ் ஆபீஸில் யூத் படம் அளவுக்கு 50 கோடி வசூலை எல்லாம் இந்த படம் ஈட்டாது என்றும் முதல் வார வசூலே ஓரளவுக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறுகின்றனர்.

GV Prakash Kumar s Happy Raj movie is Hit or Flop What about its 6 Days Box Office Collection

லாபமா? நஷ்டமா?: ஜி.வி. பிரகாஷ் நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் தான் இந்த படத்தை பார்க்க மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் மேலும், மாத இறுதியில் படம் வெளியானதும் அதற்கு முதல் வாரத்தில் வெளியான யூத் படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து ஓடிக்கொண்டிருப்பதும் தான் ஹாப்பி ராஜ் வசூல் குறைய காரணம் என்கின்றனர். ஆனால், படம் வெளியாவதற்கு முன்னமே அனைத்து ரைட்ஸ்களும் நல்ல விலைக்கு விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் பாக்ஸ் ஆபீஸிலும் பிரேக் ஈவன் எட்டிய நிலையில், இந்த படம் தயாரிப்பாளருக்கு லாபம் தான் என்றும் நஷ்டமில்லை எனக் விநியோகஸ்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஹாப்பி ராஜ் திரைப்படம் பெரிய லாபத்தை ஈட்டியிருக்க வேண்டும் என்றும் அது மிஸ் ஆகிவிட்டது என்றும் கூறுகின்றனர். இந்த வாரமும் அரை டஜன் படங்கள் வெளியாக உள்ள நிலையில் ஹாப்பி ராஜ் படத்துக்கான ஷோக்கள் மேலும், குறைந்து விடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X