என் மகன் அட்ஜெஸ்ட் பண்ணினான்.. சைந்தவி கேரக்டர் இதுதான்.. ஏ.ஆர். ரெய்ஹானா பளிச் பேட்டி!

சென்னை: ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியும் ஜி.வி. பிரகாஷின் அம்மாவுமான ஏ.ஆர். ரெய்ஹானா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய மகளை விட சைந்தவியுடன் தான் அதிகமாக பேசி வருவதாகவும் சைந்தவி அந்தளவுக்கு நல்ல பொண்ணு அவர் சீக்கிரமே வீட்டுக்கு வந்தால் தனக்கு சந்தோஷம் எனக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"மாத்திக்கலாம் மாலை" என்கிற ஆல்பம் பாடலை ஏ.ஆர். ரெய்ஹானா சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியிலும் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து குறித்த கேள்விக்கு வெளிப்படையாக ரெய்ஹானா பதில் அளித்திருந்தார்.

ar reihana gv prakash kumar saindhavi

இந்நிலையில், யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள புதிய பேட்டியில் தனது மகனும் மருமகளும் ஒன்றாக சேர வேண்டும் என்றே விரும்புவதாக கூறியுள்ளார்.

சைந்தவியை பிரிந்த ஜி.வி. பிரகாஷ்: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் பாடகி சைந்தவியை சிறு வயது முதலே காதலித்து வந்த நிலையில், 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் விவாகரத்து செய்து பிரியப் போவதாக அறிவித்தது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி தம்பதியினருக்கு அன்வி என்கிற பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகையுடன் ஜி.வி. பிரகாஷுக்கு தொடர்பு இருப்பதாகவும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பின.

ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரெய்ஹானா ஆர்ஜேவாகவும் பின்னணி பாடகியாகவும் உள்ள நிலையில், புதிதாக ஆல்பம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். "மாத்திக்கலாம் மாலை" என்கிற ஆல்பத்தை உருவாக்கிய அவர் தொடர்ந்து அதை புரமோட் செய்து பேசி வருகிறார்.

சைந்தவி வீட்டுக்கு வரணும்: பாடகி சைந்தவியுடன் தான் இப்போதும் பேசி வருகிறேன். அவரை போல ஒரு நல்ல பொண்ணை பார்க்க முடியாது. என் மகளுடன் கூட அந்தளவுக்கு எனக்கு பேச்சுவார்த்தை இல்லை. மகனிடம் இதுகுறித்து பேசினேன். ஆனால், அவன் சொல்லும் காரணங்கள் ஜீரணிக்க முடியவில்லை. அதே சமயம் அதில், பொய் இருப்பதாகவும் தெரியவில்லை. என்னை பொறுத்தவரையில் சைந்தவி திரும்பவும் வீட்டுக்கு வரவேண்டும் என்பதைத் தான் விரும்புகிறேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

அட்ஜெஸ்ட் பண்றது கஷ்டம்: சைந்தவி எந்தவொரு சூழலையும் அட்ஜெஸ்ட் பண்ணி போகக்கூடியவர் தான். ஆனால், என் மகன் தான் பெரிதாக அட்ஜெஸ்ட் பண்ணி போகும் டைப் கிடையாது. இருந்தாலும், இரண்டு மூன்று தடவை இந்த விவகாரத்தில் அவனும் அட்ஜெஸ்ட் பண்ணி போயிருக்கிறான். என்னதான் நாம பெத்தவங்களா இருந்தாலும் வாழப் போறது அவங்கதான். அவங்க வாழணும்னு நினைச்சா நாம தடுக்க முடியாது. அதே போல பிரியணும்னு முடிவு பண்ணா நாம என்னதான் சொன்னாலும் அவங்க கேட்கப் போறது கிடையாது. அவங்க வாழ்க்கைக்கு எது சரி? எது தவறுன்னு புரிந்துக் கொண்டு முடிவெடுக்க அனைத்து உரிமையும் அவர்களுக்கு உள்ளது என பேசியுள்ளார்.

பாலிவுட்டை விட மோசம்: பாலிவுட்டில் தீபிகா படுகோன் ரன்வீர் விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் கிளம்பின. ஆனால், குழந்தைப் பெற்றுக் கொண்டு இருவரும் ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யப்போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், இருவரும் அதை மறுத்து விட்டனர். ஆனால், தமிழ் சினிமாவில் சமந்தா, தனுஷ், ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஜெயம் ரவி என வரிசையாக ஏகப்பட்ட விவாகரத்து பிரச்சனைகள் அடுத்தடுத்து வெடித்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X