ஜி.வி.பிரகாஷ் பாடிய முதல் பாடல் எது தெரியுமா? இந்த வீடியோவை பாருங்க!
Recommended Video

சென்னை: ஜி.வி.பிரகாஷ் மூன்றரை வயதில் ஏஆர்.ரகுமானுக்காக பாடிய முதல் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என்று பல தளங்களில் முத்திரைப்பதித்துவருபவர் ஜி. வி.பிரகாஷ். இவர் தற்போது ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து பாபா பாஸ்கர் இயக்கத்தில் குப்பத்து ராஜா, அடங்காதே, 4ஜி, 100% காதல் போன்ற படங்கள் வரவிருக்கின்றன. இந்த நிலையில் தன்னுடை பால்ய வயது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நான் மூன்றரை வயது சிறுவனாக இருக்கும்போது ஏஆர்.ரகுமானுக்காக இந்தப்பாடலை பாடினேன். பழமையான நினைவு என்று ட்வீட் செய்துள்ளார். ஒலிப்பதிவு கூடத்தில் ஏஆர்.ரகுமான் கீபோர்டு முன்பு அமர்ந்திருக்க, அருகில் விரல் சூப்பும் சின்ன பிள்ளைபோல தலையில் குல்லாவுடன் ஜிவி.பிரகாஷ் அமர்ந்திருக்கிறார்.
மழலைக்குரலில் "
உனையன்றி தெய்வம் ஏது...
உலகெங்கும் இல்லை அல்லா...
உனக்கினை துணையாய்ச் சொல்ல
ஒன்றில்லை என் அல்லா ... "
என ஜிவி.பாடுவது மெய்சிலிர்க்க வைக்கிறது .
ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என ஜி.வி.பிரகாஷ் பாடும்போது அவருக்கு வயது ஆறு. ஆனால் அதற்கு முன்பே ஜி.வி.பிரகாஷ் ரகுமானின் இசையில் பாடியிருப்பது இந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
ஜி. வி. பிரகாஷ் வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார்.


Click it and Unblock the Notifications











