என் வாழ்க்கையை மாற்றியது தனுஷ்தான்.. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவார்.. ஜிவி பிரகாஷ் சொன்ன சீக்ரெட்

சென்னை: ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசையமைப்பாளர். இடையில் இசையமைப்பதை குறைத்துக்கொண்டு நடிப்பதில் கவனம் செலுத்திவந்தார். இருந்தாலும் சில படங்கள் தவிர்த்து அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து நடித்துவருகிறார். அடுத்ததாக அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கும் அவர்; பழையபடி இசையமைப்பதிலும் கவனம் செலுத்திவருகிறார். இந்தச் சூழலில் அவர் தனுஷ் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.

வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரிடம் உதவியாளராக பணியாற்றிய அவர் முதல் படத்திலேயே பெஸ்ட் இசையை கொடுத்தார். அதனையடுத்து அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன்படி அஜித், தனுஷ், சிம்பு, ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் பல படங்களுக்கு இசையமைத்தார். ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி இசையை கொடுத்து கட்டிப்போட்டார் அவர்.

dhanush gv prakash idli kadai

முன்னணி இசையமைப்பாளர்: முக்கியமாக அவர் இசையமைப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பரதேசி, மயக்கம் என்ன ஆகிய படங்களின் இசை அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆயிரத்தில் ஒருவன் இசையை கேட்டுவிட்டு ஜிவி பிரகாஷை தனது கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்துக்கு இசையமைக்க வைத்தார் அனுராக் காஷ்யப். அந்தப் படத்திலும் மிகச்சிறந்த இசையை கொடுத்துவிட்டு வந்தார் ஜிவி பிரகாஷ். சூழல் இப்படி இருக்க நடிப்பின் மீது பிரகாஷுக்கு ஆசை வந்தது.

கைக்கொடுக்காத படங்கள்: டார்லிங் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவருக்கு பல படங்கள் சரியாக கைகொடுக்கவில்லை. இருப்பினும் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை, ராஜீவ் மேனனின் சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்கள் பிரகாஷ் நன்றாக நடிக்கிறார் என்று பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த பேச்சிலர் படமும் சொல்லிக்கொள்ளும்படியான பெயரை பெற்றுத் தந்தது.ஆனாலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க மீண்டும் வர வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து பேசினார்கள்.

இசையில் பிஸி: அதன்படி சூரரைப் போற்று, அசுரன் என இசையமைக்க ஆரம்பித்தார். இவற்றில் சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதையும் பெற்றார் அவர். கடைசியாக அவரது இசையில் அமரன், லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்கள் வந்தன. இரண்டு படங்களுமே பெரிய ஹிட்டடித்தன. முக்கியமாக ஜிவியின் இசையும் கொண்டாடப்பட்டது. இப்போது மீண்டும் இசையமைப்பதில் பிஸியாகியிருக்கிறார். இதற்கிடையே தனது மனைவி சைந்தவியை சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்தார் அவர்.

ஜிவி பிரகாஷ் பேட்டி: இரண்டு பேரும் விவாகரத்து பெற்றாலும் சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜிவி பிரகாஷ் கான்செர்ட்டில் சைந்தவியும் மேடையில் பாடினார். அவற்றில் பிறை தேடும் இரவிலே பாடலை சைந்தவி பாடியபோது ரசிகர்கள் உருகிப்போயினர். இந்நிலையில் ஜிவி அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. தனுஷ் குறித்து அவர் பேசுகையில், "பொல்லாதவன் படம்தான் தனுஷுக்கு நான் இசையமைத்த முதல் படம். அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் நாங்கள் இரண்டு பேரும் முதன்முதலாக சந்தித்துக்கொண்டோம்.

வாழ்க்கையில் பங்கு: எனது வாழ்க்கையில் நான் அடுத்தக்கட்டத்துக்கு போனதெல்லாம் தனுஷுக்கு நான் இசையமைத்த படங்கள் மூலம்தான். மயக்கம் என்ன, அசுரன் என அந்தப் படங்களின் லிஸ்ட் இருக்கும். நானும் அவரும் ரொம்பவே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். வாடா மச்சான், போடா மச்சான் என்றுதான் பேசிக்கொள்வோம். திடீரென எங்காது ஊருக்கு ஒன்றாக செல்வோம். அவரைப் பொறுத்தவரை பிடிக்கவில்லை என்றால் மூஞ்சில் அடிச்ச மாதிரி பேசிவிடுவார்" என்றார். தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்துக்கும் ஜிவிதான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X