சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ
சென்னை: சவ்கிதாருடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், நாய் ப்ரூனோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வாட்ச்மேன். பிரதமர் நரேந்திர மோடி தனது பெயருக்கு முன்னால் சவ்கிதாரை சேர்த்த பிறகு வாட்ச்மேன் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.

அந்த போஸ்டரில் நானும் சவ்கிதார் தான் என்ற பலகையை நாய் பிடித்திருப்பது போன்று இருந்தது. அந்த போஸ்டரை பார்த்து சவ்கிதார்கள் கொந்தளித்து இலவச விளம்பரம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால் நடக்கவில்லை.
ஏப்ரல் 12ம் தேதி வாட்ச்மேன் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சவ்கிதார் ப்ரூனோவுடன் விளையாடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
ஜி.வி. பிரகாஷும், சவ்கிதாரும் விளையாடும் வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











