விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சை.. விரைவில் நலம் பெற ஜிவி பிரகாஷ் பிரார்த்தனை!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என்று ஜிவி பிரகாஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தீவிர இருமல், காய்ச்சல், சளி காரணமாக கேப்டன் விஜயகாந்த், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

தொண்டையில் தொற்று மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Gv prakash prays for vijayakanth full recovery soon

கேப்டன் விஜயகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் முன்னணியில் இருக்கும் போது, புரட்சிக் கலைஞராக மாஸ் காட்டியவர் விஜயகாந்த். ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என அழைக்கப்பட்டார். தற்போது சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிவிட்ட கேப்டன், வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

மருத்துவமனை அறிக்கை: இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

தொடர் சிகிச்சை: நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புவதாகவும், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஜிவி பிரகாஷ் ட்வீட்: இந்நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், விஜயகாந்த் சார் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டி, கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகே வெக்காளி அம்மன் கோயிலில் தேமுதிக கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X