இன்று விஜய் மட்டும் அல்ல ஜி.வி. பிரகாஷ் படத்திற்கும் பூஜை: ஹீரோயின் ரைசா

By Siva

Recommended Video

ஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா நடிக்கும் பட பூஜை- வீடியோ

சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா நடிக்கும் படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டுள்ளது.

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா வில்சன் ஆகியோர் சேர்ந்து ஃபேன்டசி காமெடி படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஆரா சினிமாஸ் தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி துவங்க உள்ளது.

ஜி.வி. பிரகாஷ்

தளபதி 63 படத்திற்கு மட்டும் அல்ல ஜி.வி. பிரகாஷ் குமாரின் படத்திற்கும் இன்று தான் பூஜை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ரைசாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜி.வி.

காமெடி

காமெடி

மொரட்டு சிங்கிளாக இருக்கும் ஜி.வி. பிரகாஷ் வாழ்வில் காதல் வருகிறதாம். அவரும், ரைசவும் இரவு நேரத்தில் பயணம் செய்வார்களாம். அந்த பயணங்களின்போது ஏற்படும் தடைகள் பற்றி தான் கதை என்கிறார் இயக்குனர் கமல் பிரகாஷ்.

ஹீரோ

ஹீரோ

படத்தின் கதையை எழுதி முடித்த உடன் இதில் ஜி.வி. பிரகாஷ் குமார் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷால் தான் சிறப்பாக நடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஜி.வி.க்கு சுவாரஸ்யமான ஜோடியை தேடினேன். அப்பொழுது தான் ரைசாவை ஹீரோயினாக்கினோம் என்கிறார் கமல்.

குருசோமசுந்தரம்

குருசோமசுந்தரம்

ஜி.வி. பிரகாஷுக்கு வில்லனாக ஜோக்கர் படம் புகழ் குரு சோமசுந்தரம் நடிக்கிறாராம். மேலும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் புகழ் ஷா, கலக்கப் போவது யாரு புகழ் ராமர், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். செந்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X