மாறன் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஆக்சன் கலந்த திரில்லர் கதை களத்தில் உருவாகி வருகிறது மாறன் திரைப்படம்

தனுஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் . மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இருவரும் இந்த படத்தில் ரிப்போர்ட்டராக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க மாறன் முக்கிய அப்டேட் ஒன்றே ஜிவி பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ளார்.

 அனைவரும் பாராட்டத்தக்க இயக்குனர்

அனைவரும் பாராட்டத்தக்க இயக்குனர்

துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் அனைவரும் பாராட்டத்தக்க மிகச் சிறந்த இயக்குனராக உள்ளார் கார்த்திக் நரேன். கார்த்திக் நரேனின் இயக்கத்தில் இப்பொழுது மாறன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது அசுரன், கர்ணன் என தொடர் வெற்றிகளை கொடுத்த தனுஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தியா மற்றும் வெளிநாடு என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது

 அமீர் சிறப்பு தோற்றத்தில்

அமீர் சிறப்பு தோற்றத்தில்

மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் மாறனில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் மூக்குத்தி அம்மன் ஸ்ம்ருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நடிகரும் இயக்குனருமான அமீர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மாறன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூழலில் திரைப்படம் தாறுமாறாக உருவாகி வருகிறது

 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது

இறுதிகட்டத்தை எட்டியுள்ளது

இதுவரை கார்த்திக் நரேன் இயக்கிய திரைப்படங்களில் இருந்து சற்று வித்தியாசமான படமாக உருவாகி வரும் மாறன், கார்த்திக் நரேன் ஸ்டைலில் பாதியும், தனுஷ் ஸ்டைலில் பாதியும் இருக்கும் என கூறப்பட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் சென்ற ஆண்டு படப்பிடிப்பு பணிகள் முடிந்திருக்க வேண்டியது ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

 இசைப் பணிகள் தொடங்கிவிட்டது

இசைப் பணிகள் தொடங்கிவிட்டது

எப்பொழுதும் யூகிக்க முடியாத திரைக்கதையின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் கார்த்திக் நரேன் இந்த படத்தையும் அதே பாணியில் இயக்கி இருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் மாறன் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். மாறன் டீஸர் குறித்து அப்டேட்டை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ள ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஜிவி பிரகாஷ்குமார் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதாவது மாறன் இசைப் பணிகள் தொடங்கி விட்டதாகவும், ஆக்சன் பின்னணியில் இசை சும்மா வெறித்தனமாக இருக்கும் எனவும் ஜிவி பிரகாஷ்குமார் வேற லெவல் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அசுரன், சூரரைப்போற்று உள்ளிட்டப் படங்களை தொடர்ந்து மாறனும் ஜிவி பிரகாஷ்குமாருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X