Captain Miller: இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும்.. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் பாடிய பாட்டு!
சென்னை: கேப்டன் மில்லர் படம் இந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை டார்கெட் செய்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படத்துக்கு போட்டியாக களமிறக்க உள்ளார்.
கேப்டன் மில்லர் படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்து வந்த நிலையில், விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட ஜி.வி. பிரகாஷ் முடிவு செய்துள்ளார்.

நடிகர் தனுஷ் பாடிய பாடலின் வரிகளையும் ஸ்டூடியோவில் தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தற்போது வெளியிட்டு செம அப்டேட் கொடுத்துள்ளார்.
தனுஷின் கேப்டன் மில்லர்: ராக்கி, சாணிக் காகிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்து தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கேப்டன் மில்லர் வெளியாகிறது. தீபாவளிக்கு ஏதாவது அப்டேட் வருமா என்று எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் பாடிய பாட்டு: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், "You cannot win when im alive .. and today is not my time to die ...
ITS YOURS
இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் ... புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ....
நாந்தாண்டா நீதி ....
நாந்தாண்டா நீதி ....
Killer killer captain miller .....
Killer killer captain miller ....." என ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார்.
பொங்கல் வின்னர்: ரஜினிகாந்த் கேமியோவாக நடித்த லால் சலாம், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள அயலான், சுந்தர். சியின் அரண்மனை 4 உள்ளிட்ட படங்களுடன் தனுஷின் கேப்டன் மில்லர் போட்டியாக வெளியாக உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய கிளாஷ் உருவாகி உள்ளது. இதில், யார் பொங்கல் வின்னர் என்கிற கேள்வி எழுந்துள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்குத் தான் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











