ஜிவி பிரகாஷின் அடங்காதே… விரைவில் திரையில் அடங்காமல் ஓடும் !
சென்னை : ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள அடங்காதே திரைப்படம் விரைவில் வெளியாகும் என இயக்குனர் கூறியுள்ளார்.
சரத்குமார், சுரபி, மந்தரா பேடி,யோகி பாபு உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷ் இசையும் அமைத்துள்ளார்.

திறமையான நடிகர்
இசையமைப்பாளர், பாடகர் , நடிகர் என பல திறமைகளை கொண்ட ஜிவி பிரகாஷ் நடித்து வரும் திரைப்படம் தான் அடங்காதே. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு படத்தின் மேல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

யு / ஏ சான்றிதழ்
'அடங்காதே' திரைப்படத்திற்கு யு / ஏ சான்றிதழை தணிக்கை குழு அளித்துள்ளது. கொரோனா தொற்று நிலைமை சீரானதும் இப்படம் திரைக்கு வரும் என்று நம்பப்படுகிறது. திரையரங்குகள் திறக்கப்படும் போது, ஜி.வி.பிரகாஷின் 'அடங்காதே' திரைக்கு வரும் முதல் சில படங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரிகிறது.

இசையமைத்துள்ளார்
சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சுரபி, சரத்குமார், தம்பி ராமையா, மந்திரா பேடி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் அவர்களே இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். அரசியல் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள அடங்காதே படத்தை விரைவில் வெளியிட குழு திட்டமிட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நேரடியாக தொலைக்காட்சி
கோலிவுட்டில் ஒரு பன்முக நடிகரான ஜி.வி.பிரகாஷ் கையில் ஏராளமான படங்கள் உள்ளன. அவர் கடைசியாக நடித்த 'வணக்கம் டா மாப்ள' தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. எம். ராஜேஷ் இயக்கிய இப்படத்தில் ஆனந்த்ராஜ், டேனியல், அமிர்தா ஐயர், ரேஷ்மா ஆகியோர் நடித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











