விஞ்ஞானிகளை அங்கீகரிக்கும் அறிவு... மிரட்டுறாரே ஜிவி பிரகாஷ்... ஐங்கரன் ட்ரெயிலர் ரிலீஸ்!
சென்னை : அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இவரது பேச்சுலர், ஜெயில் மற்றும் செல்பி படங்கள் இவருக்கு வித்தியாசமான மற்றும் சிறப்பான படங்களாக அமைந்தன. இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த ஐங்கரன் படம் நாளை மறுநாள் ரிலீசாக உள்ளது.

நடிகர் ஜிவி பிரகாஷ்
நடிகர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக கோலிவுட்டில் தன்னை சிறப்பாக நிலைநிறுத்தியுள்ளார். இவரது அடுத்தடுத்த படங்களின் ஹிட் இவரை இசை அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாட வைத்துள்ளது. தனுஷ், சூர்யா என தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
இதுஒருபுறம் இருந்தாலும் நாயகனாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அதிகமான காதல் தூக்கலான படங்களில் நடித்து பெயர் பெற்ற இவர், தற்போது தன்னுடைய கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சிறப்பான பேச்சுலர் படம்
சமீபத்தில் இவரது நடிப்பில் பேச்சுலர், ஜெயில் ஆகிய படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் ரிலீசாகின. இந்தப் படத்தில் பேச்சுலர் சிறப்பான படமாக இவருக்கு அமைந்தது. விமர்சன ரீதியாக ஜெயில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கௌதம் மேனனுடன் இவர் இணைந்து நடித்திருந்த செல்பி படம் ரிலீசானது.

இசையமைப்பில் முக்கிய கவனம்
இந்தப் படமும் இவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தாலும், தன்னுடைய படங்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.

ஐங்கரன் படம்
இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த ஐங்கரன் படம் நாளை மறுதினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈட்டி என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ரவி அரசு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காமன் மேன் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளனர்.
Recommended Video

பாராட்டு மழையில் ஐங்கரன்
மஹிமா நம்பியார் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் மிரட்டலாக காணப்படுகிறது இந்த ட்ரெயிலர். மேலும் படத்தின் ப்ரீமியரை பார்த்துள்ள அனைவரும் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ஜிவி பிரகாஷின் சிறப்பான படங்களில் இதுவும் ஒன்றாக அமையும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











