Don't Miss!
- News
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் குரூப்பில் கமெண்ட்.. கொல்லப்பட்ட நபர்.. என்.ஐ.ஏ விசாரணை
- Sports
இதுமட்டும் நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??.. உலக சாதனைக்கே வரவிருந்த விணை.. பும்ராவின் அதிர்ஷ்டம்!!
- Finance
'இந்த' துறையில் ரூ.30 கோடி-யா.. அசத்தும் ஈரோடு ஆர்த்தி..!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Automobiles
உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா? இனி கவனமா இருக்கணும்!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஜிவி பிரகாஷோட அடுத்தப்படம்... ரிலீஸ் எப்போன்னு பாருங்க!
சென்னை : நடிகரும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், தற்போது ஒருபுறம் இசையமைப்பையும் ஒருபுறம் நடிப்பையும் மாறி மாறி செய்து வருகிறார். மிகவும் பிசியாக காணப்படுகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் அடுத்தடுத்து ஜெயில் மற்றும் பேச்சிலர் படங்கள் ரிலீசான நிலையில், அடுத்ததாக இவரது நடிப்பில் ஐங்கரன் ரிலீசாக உள்ளது.
கில்லி
போல
சொல்லி
அடித்த
யாஷ்...செம
டிரெண்டிற்காகும்
யாஷின்
மாஸ்
பேச்சு
வீடியோ

நடிகர் ஜிவி பிரகாஷ்
நடிகரும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்த முன்னணி படங்களில் கமிட்டாகி இசையமைத்து வருகிறார். சூர்யாவின் வாடிவாசல், பாலாவின் சூர்யா41, தனுஷின் வாத்தி ஆகிய படங்களில் இசையமைத்து வருகிறார். மேலும் காத்தியின் சர்தார், அருண் விஜய்யின் யானை, விஷாலின் மார்க் ஆண்டனி, லாரன்சின் ருத்ரன் ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

தேர்ந்தெடுத்த கேரக்டர்கள்
இந்நிலையில் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனது சிறப்பை காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஜெயில், பேச்சிலர் படங்கள் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன. ஆரம்பத்தில் ஓவரான காதல் படங்களில் நடித்து கவனத்தை பெற்ற ஜிவி தற்போது சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஐங்கரன் படத்தின் ரிலீஸ்
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி நடித்துள்ள இடிமுழக்கம் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்ததாக அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ரெபல் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இவரது நடிப்பில் ஈட்டி பட இயக்குநரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 5ல் ரிலீஸ்
மஹிமா நம்பியார் ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த நிலையில், தற்போது மே மாதம் 5ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், அபிஷேக் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசை
இந்தப் படத்தை காமன் மேன் நிறுவனம் சார்பில் கணேஷ் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாவது ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான செய்தியாக அமைந்துள்ளது.

ஈட்டி பட இயக்குநரின் அடுத்த படைப்பு
அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் ஈட்டி என்ற படத்தை இயக்கியுள்ள ரவி அரசு இயக்கத்தில் வெளியாகியுள்ள ஐங்கரன் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகுந்து காணப்படுகிறது. படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.