ஜிவி பிரகாஷின் “ஐங்கரன்“ரிலீஸில் சிக்கல்… படக்குழு எடுத்த அதிரடி முடிவு !
சென்னை : ஜிவி பிரகாஷின் "ஐங்கரன்" படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இப்படத்தில் ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், மடோனா செபாஸ்டின், யோகி பாபு, ரவீணா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் ஐங்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஈட்டி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

ஹீரோவாக
இதையடுத்து டார்லிங் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஜிவி பிரகாஷ். அதன் பின்னர் பென்சில், த்ரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, குப்பத்துராஜா, வாட்ச்மேன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

செல்ஃபி
ஜி.வி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான முதல் படம் செல்ஃபி. இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் இயக்கியுள்ள இப்படம் கடந்த மாதம் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தில் வில்லனாக கெளதம் மேனன் மிரட்டி இருந்தார். வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், குணநிதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஐங்கரன்
இதையடுத்து, இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ஐங்கரன். ஜிவி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 2018 ஆம் ஆண்டே முடித்துவிட்டனர். ஆனால், கொரோனாவால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது வரை இந்த படம் ரிலீசாகாமலேயே உள்ளது. இதையடுத்து, இப்படம் 28ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
Recommended Video

தள்ளிவைக்கப்பட்டது
ஆனால், அன்று விஜய்சேதுபதியின் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் வெளியாக உள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் படக்குழு தள்ளிவைத்துள்ளது. இதையடுத்து, ஒருவழியாக இந்த படம் மே 5-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று இப்படம் ஆஹா ஓடிடித்தளத்தில் மே மாத இறுதியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











