ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படத்தை கைப்பற்றியது பிரபல தயாரிப்பு நிறுவனம்!
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது ஒரு டஜன் படங்களுடன் கைநிறைய நடித்து வருகிறார்.
இவரின் படங்கள் மினிமம் கேரன்டி வெற்றியை பெற்று வருவதால் புது இயக்குனர்கள் பலரும் இவரை வைத்து இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் சதீஷ் குமார் இயக்கியிருக்கும் பேச்சுலர் திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இடத்தை
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஜிவி பிரகாஷ் குமாரின் இசைக்காகவே பலம் கோடி இளைஞர்கள் அடிமையாக உள்ளனர். இவர் இசையமைத்த மயக்கம் என்ன, மதராசப்பட்டினம், ஆடுகளம், விசாரணை, சூரரைப்போற்று என பல திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த தோடு விருதுகளையும் வென்றுள்ளது.

கலக்கலான டீசர்
இவ்வாறு இசையமைப்பாளராக ஒரு கலக்கு கலக்கிய ஜிவி பிரகாஷ் குமார் இப்பொழுது ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி வர பெரும்பாலும் அறிமுக இயக்குனர்களின் இயக்கத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சதீஷ் குமார் இயக்கும் பேச்சுலர் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த கலக்கலான டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இணைய தளத்தில் சக்கை போடு போட்டது.

எதார்த்த கதை களத்தை
திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்வது எப்படி என்ற எதார்த்த கதை களத்தை மையமாகக் கொண்டு தற்போதுள்ள தலைமுறை இளைஞர்களுக்கு ஏற்றவாறு உருவாகியிருக்கும் பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக பிரபல மாடல் அழகி திவ்யபாரதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இதில் முனீஸ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். டில்லிபாபு தயாரித்துள்ளார்
Recommended Video

சக்தி பிலிம் ஃபேக்டரி
சில உண்மை சம்பவங்களை மையமாகக்கொண்டு உருவாகியிருக்கும் பேச்சுலர் திரைப்படம் வரும் சம்மருக்கு ரிலீசாக இருக்க இப்பொழுது அதன் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி பிலிம் ஃபேக்டரி வாங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











