ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படம்… துவங்கியது கலக்கல் புக்கிங்ஸ்

சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சுலர்.

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப படம் வரும் டிசம்பர் 3ம் தேதி ரிலீசாக உள்ளது.

ஜிவியின் அடுத்தடுத்த படங்கள் 5 நாட்கள் இடைவெளியில் ரிலீசாக உள்ள நிலையில் பேச்சுலர் படத்தின் புக்கிங் துவங்கியுள்ளது.

பேச்சுலர் படம்

பேச்சுலர் படம்

நடிகர் ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சுலர். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் தனது வழக்கமான பாணியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.படம் இளைஞர்களுக்கான படமாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், படம் குடும்பங்கள் என்ஜாய் செய்யும் விதத்தில் உருவாகியுள்ளதாக படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 3ல் ரிலீஸ்

டிசம்பர் 3ல் ரிலீஸ்

இந்தப் படம் வரும் வரும் டிசம்பர் 3ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. படத்தில் மேலும் முனீஷ்காந்த், பகவதி பெருமாள், உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சிஸ் பிலிம் பேக்டரி படத்தை தயாரித்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

ஜிவியின் முந்தைய படங்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களாக பேச்சுலர் மற்றும் ஜெயில் படங்கள் 5 நாட்கள் இடைவெளியில் ரிலீசாக உள்ளன. முதலில் வரும் டிசம்பர் 3ம் தேதி பேச்சுலர் படம் ரிலீசாக உள்ள நிலையில் வரும் 9ம் தேதி ஜெயில் படம் ரிலீசாக உள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

பேச்சுலர் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தற்போது படம் ரிலீசாக உள்ளது ஜிவி பிரகாஷ் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் இளம் பிராயத்து இளைஞன் மற்றும் வளர்ந்து ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞன் என இருவேறு கெட்டப்புகளில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசை

ஜிவி பிரகாஷ் இசை

இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஜிவி பிரகாஷ் மேலும் இசையமைப்பையும் மேற்கொண்டுள்ளார். அவரது இசையில் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை சிறப்பாக அமைந்திருந்தது. இந்தப் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மிஷ்கின் சிறப்புத் தோற்றம்

மிஷ்கின் சிறப்புத் தோற்றம்

இந்தப் படத்தில் டைரக்டர் மிஷ்கின் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கொரோனா காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போன நிலையில் தற்போது படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் சிறப்பான வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தின் புக்கிங்குகள் தற்போது துவங்கியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X