ஜிவி பிரகாஷின் "பேச்சுலர்" ரிலீஸ் தேதி வெளியானது!
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இப்பொழுது பல்வேறு படங்களில் பிஸியாக ஹீரோவாக நடித்து வருகிறார்
நடிப்பு,இசை என இரண்டிலும் கலக்கி கொண்டுள்ள ஜிவி பிரகாஷ் இப்பொழுது அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
காதலர்களுக்கு இடையேயான அழுத்தமான காதலையும் அதிலுள்ள பிரச்சினைகளையும் ஆழமாக கூற உள்ள பேச்சுலர் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

தனித்துவமான இசையமைப்பாளராக
சூரரைப் போற்று, அசுரன் என ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது மேலும் தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ்குமார் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

பேச்சுலர் படத்தில் ஹீரோவாக
தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் ஜிவி பிரகாஷ் குமார் இப்பொழுது அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் பேச்சுலர்
என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்

சர்ச்சைக்குரிய வசனங்களும்
திவ்யா பாரதி என்ற அறிமுக நடிகை இப்படத்தில் நடித்துள்ளார். இப்போதுள்ள தலைமுறை காதலர்களின் காதலை அழுத்தமாகவும் அதில் உள்ள பிரச்சினைகளையும் மிகத் தெளிவாக இந்த திரைப்படம் பேச உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சுலர் படத்தின் டீசர் வெளியாகி சக்கைபோடு போட்டது. மேலும் சில சர்ச்சைக்குரிய வசனங்களும் இதில் இடம்பெற்றன.

ஐடி துறையில் பணியாற்றும் இளைஞராக
தனது ஒவ்வொரு படத்திற்கும் நடிப்பை வித்தியாசப் படுத்திக் கொண்டு வரும் ஜிவி ரகாஷ்குமார் இந்த படத்தில் ஐடி துறையில் பணியாற்றும் இளைஞராக நடித்துள்ளார். இளம் காதலர்களுக்கு சகஜமாக நடக்கும் சண்டைகள் பின் எவ்வாறு விஸ்வரூபம் எடுத்து அவர்கள் காதலுக்கு வேட்டு வைக்கிறது என்பதை இந்த திரைப்படம் கூற இருக்கிறது. ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி டில்லிபாபு இப்படத்தை தயாரித்து உள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் இசையும் அமைத்துள்ளார்.

டிசம்பர் 3ஆம் தேதி ரிலீஸ்
டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சூழலில் இந்த படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுலர் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











