அடுத்தடுத்து வெளியாகும் ஜிவி பிரகாஷ் படங்கள்... ஜெயில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில். வசந்தபாலன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ஜிவி பிரகாஷ்
நடிகர் ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்த சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இசையமைப்பிலும் பின்னி பெடலெடுக்கிறார். மற்ற படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார். பன்முகத் திறமையை கோலிவுட்டில் காட்டிவரும் இவரது நடிப்பில் பேச்சிலர், ஜெயில் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளன.

பேச்சுலர் படம் ரிலீஸ்
முன்னதாக அவரது பேச்சுலர் படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் டிசம்பர் 3ம் தேதி இந்தப் படம் திரையரங்குகிள்ல ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஜிவி பிரகாஷும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

ஜெயில் படம் ரிலீஸ்
இந்நிலையில் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படமும் ரிலீசுக்கு தயாராக இருந்தது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியவுடன் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

ஜிவி பிரகாஷ் இசை
படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ள நிலையில் படத்தின் நகரோடி என்ற பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அபர்ணதி ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தின் மெலடி பாடலும் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது.

டிசம்பர் 9ல் ரிலீஸ்
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 9ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

வசந்தபாலனின் இயக்கம்
வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் என்று சிறப்பான படங்களை இயக்கிய வசந்தபாலனின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு அவரது இந்தப் படம் ரிலீசாக உள்ளது. கொரோனா காரணமாக பல மாதங்களாக முடங்கியிருந்த இந்தப் படம் தற்போது ரிலீசாக உள்ள நிலையில் சிறப்பான வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











