எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஜெயில் படம்... மில்லியன் வியூக்களை தாண்டிய டீசர்!

சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ், அபர்ணிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில்.

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெற்றுள்ளது.

நேற்றைய தினம் வெளியான படத்தின் மிரட்டலான டீசர் ஒரு மில்லியன் வியூக்களை கடந்து சாதனை மேற்கொண்டுள்ளது.

நடிகர் ஜிவி பிரகாஷ்

நடிகர் ஜிவி பிரகாஷ்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அபர்ணிதி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தை இயக்கியுள்ளார் வசந்தபாலன். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் நீண்ட நாட்களாக படம் ரிலீசுக்காக காத்திருந்தது.

ஸ்டூடியோ க்ரீன் வெளியீடு

ஸ்டூடியோ க்ரீன் வெளியீடு

முன்னதாக டார்லிங், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய ஜிவி பிரகாஷின் படங்களை வெளியிட்ட ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவேற்பை பெற்ற பாடல்

வரவேற்பை பெற்ற பாடல்

முன்னதாக படத்தின் ப்ரமோஷன் பணிகளை தயாரிப்புத் தரப்பு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. படத்தின் காற்றோடு காற்றானேன் பாடல் தனுஷ் மற்றும் அதிதி ஹைதாரி குரல்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாடலின் வீடியோவும் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.

டீசர் வெளியீடு

டீசர் வெளியீடு

படத்தில் ஜிவி மற்றும் அபர்ணிதியின் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கததில் வெளியிட்டுள்ளார். அதை தொடர்ந்து ஜிவி பிரகாஷும் அவருக்கு நன்றி தெரிவித்து டீசரை ஷேர் செய்திருந்தார்.

மிரட்டலான டீசர்

மிரட்டலான டீசர்

இந்நிலையில் அந்த டீசர் மிகவும் மிரட்டலான வகையில் அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் அந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். தன்னை சிறப்பான வகையில் கேரக்டருடன் பொருத்தியுள்ளார். மேலும் ராதிகா சரத்குமாருக்கும் படத்தில் வெயிட்டான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மில்லியன் வியூக்கள்

ஒரு மில்லியன் வியூக்கள்

இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது ஒரே நாளில் ஒரு மில்லியன் வியூக்களை தாண்டி 2 மில்லியன் வியூக்களை நோக்கி செல்வதாக படக்குழு உற்சாகம் தெரிவித்துள்ளது. படத்தில் கைதியாக இருக்கும் ஜிவி பிரகாஷுக்கு காவலர் ஒரு சிகரெட் பற்ற வைக்கும் காட்சி வைரலாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை

ஜிவி பிரகாஷ் இசை

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். காற்றோடு காற்றானேன் பாடல் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பின்னணி இசையிலும் மிரட்டியுள்ளார் ஜிவி. இது இந்த டீசர் மூலம் வெளிப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X