ஜிவி பிரகாஷின் ஆக்ஷன், ரொமான்ஸ் காட்சிகளுடன்.. ஜெயில் டீசர் ரிலீஸ் !
சென்னை : ஜெயில் திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தும் நடித்தும் உள்ளார்.
வெளியீட்டு உரிமையைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வசந்தபாலன்
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில். இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்த நிலையிலும், கொரோனா பரவல் காரணமாகப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, படத்தைத் திரைக்குக் கொண்டுவரும் பணியில் படக்குழு வேகம் காட்டிவருகிறது.

காத்தோடு காத்தானேன்
தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இணைந்து பாடியா காத்தோடு காத்தானேன் பாடல் 2020ம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இதேபோபல ஜிவி பிரகாஷ் மற்றும் அறிவு இணைந்து பாடிய பத்து காசு என்ற பாடலும் வெற்றி பெற்றது.

ஸ்டுடியோ க்ரீன்
ஜெயில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
டீசர்
வடசென்னை பகுதியை மையமாக வைத்து இத்திரைப்படம் ஒருவாங்கப்பட்டுள்ளது. இதில், ஜிபி பிரகாஷின் ஆக்ஷன் , ரொமான்ஸ் என அனைத்தும் மிரட்டலாக உள்ளது. இந்த டீசரை தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக படத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து இருந்தார்.

ஜிவியின் இசையில்
ஜெயில் திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் நடித்தது மட்டும் இல்லாமல் அவரே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











