Adiyae - விஜய்யின் யோகன் அத்தியாம் 1 முதல் அஜித் வென்ற ஃபார்முலா 1 ரேஸ் வரை- பங்கமாய் கலாய்த்த அடியே போஸ்டர்

சென்னை: Adiyae Motion Poster (அடியே மோஷன் போஸ்டர்) ஜிவி பிரகாஷ் நடிப்பில் திட்டம் இரண்டு படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அடியே படத்தின் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். 17 வயதில் அந்த படத்துக்கு அவர் இசையமைத்தார். வெயில் படம் வெயிட்டேஜான கதை என்பதால் அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையை கேட்ட ஒட்டுமொத்த திரையுலகமும், இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு சிறப்பாக இசையமைக்க தனித்திறமை வேண்டும் என அவரை உச்சி முகர்ந்து கொண்டாடியது.

GV Prakashs New Movie Adiyae Motion Poster Out Now

முன்னணி இசையமைப்பாளர்: வெயில் படம் கொடுத்த வெற்றியால் ஜிவி பிரகாஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்தவகையில் ரஜினி நடித்த குசேலன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மேற்கொண்டு அடையாளப்பட்டார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் என்று குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அந்த பிரபல்யத்தை விட ஜிவி பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரபல்யம் அவரிடன் விரைவிலேயே வந்து சேர்ந்தது.

தேசிய விருது: செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஜிவி பிரகாஷ் அமைத்திருந்த இசை உச்சக்கட்ட க்ளாசிக். அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. இது பலரையும் அதிருப்தியடைய செய்தது. தொடர்ந்து இசையமைத்து வந்த அவருக்கு சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. ஒருவழியாக பல வருடங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

GV Prakashs New Movie Adiyae Motion Poster Out Now

நடிப்பில் கவனம்: இதற்கிடையே அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படங்கள். இந்த மூன்று படங்களிலும் அவரது நடிப்பு நன்றாகவே மெருகேறியிருந்தது.

GV Prakashs New Movie Adiyae Motion Poster Out Now

ஜிவி பிரகாஷின் புதிய படம்: இந்நிலையில் ஜிவி பிரகாஷ் அடியே என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல, திட்டம் இரண்டு ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார். வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய், 96 கௌரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படத்தை மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

கவனம் ஈர்க்கும் மோஷன் போஸ்டர்: இந்தச் சூழலில் அடியே படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இலங்கை பிரதமர் சீமான் மெட்ராஸ் வருகை என ஆரம்பிக்கும் மோஷன் போஸ்டரில் யோகன் அத்தியாயம் ஒன்று படத்தின் 150ஆவது நாள் வெற்றி விழா (விஜய் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம்), அஜித்குமார் ஐந்தாவது முறையாக ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் வென்றிருக்கிறார், சூப்பர் ஸ்டார் மன்சூர் அலிகான் என பங்கமாக பலரும் கலாய்க்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X