ஜிவி பிரகாஷ் -கௌதம் மேனன் இணைந்து மிரட்டும் செல்ஃபி படம்… இன்று ட்ரெயிலர் வெளியீடு
சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ்குமார், கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள படம் செல்ஃபி.
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று மாலை படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளது.

நடிகர் ஜிவி பிரகாஷ்
நடிகர் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நாளைய தினம் அவரது பேச்சுலர் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. வரும் 9ம் தேதி வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படம் ரிலீசாக உள்ளது. இந்த இரு படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிப்பு + இசை
நடிப்பு மற்றும் இசையமைப்பு இரண்டையும் சமமான அளவில் சிறப்பாக முன்னிருந்து சென்றுவரும் ஜிவி பிரகாஷ், தான் நடிக்கும் படங்களுக்கு தானே இசையமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் அவர் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.

செல்ஃபி படத்தில் இசை
இந்நிலையில் செல்ஃபி படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தை கலைப்புலி எஸ் தாணு தனது வீ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். முன்னதாக படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நேற்றைய தினம் இரண்டாவது போஸ்டரை தாணு வெளியிட்டுள்ளார். இந்தப் போஸ்டரிலும் ஜிவி மற்றும் கௌதம் மேனன் இருவரும் பிரதானப் படுத்தப் பட்டுள்ளனர்.

விரைவில் ரிலீஸ்
விரைவில் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று மாலை படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதிமாறன் இயக்கியுள்ளார். த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வர்ஷா பொல்லம்மா நாயகி
படத்தில் ஜிவிக்கு வர்ஷா பொல்லம்மா நாயகியாகியுள்ளார். மேலும் வாகை சந்திரசேகர், தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக தாணு தயாரிப்பில் நடிகராக முதல் முறையாக இணைந்துள்ளது குறித்து ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மேலும் கௌதம் மேனனுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
Recommended Video

ரிலீசுக்கு தயாராகும் செல்ஃபி
ஜிவி பிரகாஷ்குமாரின் பேச்சுலர், ஜெயில் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாவது குறித்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக செல்ஃபி படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளது மற்றொரு சிறப்பாக பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











